• Apr 26 2024

வாரிசு இசை வெளியீட்டு விழாவுக்காக சென்னை ஏர்போர்ட்டில் மாஸாக வந்து இறங்கிய ராஷ்மிகா மந்தனா

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் நடிப்பில் தற்பொழுது வாரிசு என்னும் திரைப்படம் உருவாகி வருகின்றது. இப்படத்தினை இயக்குநர் வம்சி இயக்கியுள்ளதோடு கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாரிசு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகும் என்றும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் இவர்களுடன் பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, குஷ்பு, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா எனப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்றைய தினம் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது.


இந்த நிலையில், வாரிசு படத்தின் நடிகையான ராஷ்மிகா மந்தனாவும் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள சென்னை வந்துள்ளார். சென்னை விமான நிலையத்திற்கு அவர் வந்து இறங்கிய புகைப்படம் மற்றும் வீடியோக்கள் அதிகம் வைரலாகி வருகிறது. 

ரசிகர்களுடன் புகைப்படங்களும் ராஷ்மிகா மந்தனா எடுத்துக் கொண்ட நிலையில், இன்னும் எந்தெந்த பிரபலங்கள் எல்லாம் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகிறார்கள் என்பதை அறியவும் ரசிகர்கள் ஆவலாக உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement

Advertisement