• Sep 25 2023

ஏர்போர்ட்டில் சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய ராஷ்மிகா...என்ன செய்திருக்காருன்னு பாருங்க..! Viral Vedio..!

Jo / 1 month ago

Advertisement

Listen News!

தற்போதைய சினிமா உலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ராஷ்மிகா மந்தனா. இவர் கன்னடத்தில் அறிமுகமாகி பின் தெலுங்கு படங்கள் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.

ஏற்கனவே தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்த ராஷ்மிகா மந்தனா கார்த்தி நடிப்பில் வெளிவந்த சுல்தான் படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழில் என்ட்ரி கொடுத்தார்.

இதை தொடர்ந்து தளபதி விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்தில் நடித்திருந்தார். மேலும் அடுத்ததாக தனுஷ் படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.எனவே பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்நிலையில், நடிகை ராஷ்மிகா மந்தனா விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கிருந்த சிறுவன் தன்னுடன் புகைப்படம் எடுக்கவேண்டும் என ஆசையுடன் இருந்ததை பார்த்த ராஷ்மிகா அந்த சிறுவனை அழைத்து புகைப்படம் எடுத்து கொண்டார்.

தற்போது இந்த வீடியோ ரசிகர்களிடையே செம வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement

Advertisement