• May 13 2024

குணசேகரனுக்கு தெரியாமல் கதிர் பார்த்த வேலை... கையும் களவுமாக தூக்கிச் சென்ற போலீஸ்... ஜீவானந்தத்தை தேடிச் சென்ற ஜனனிக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

Prema / 8 months ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல ஹிட் சீரியல் தான் 'எதிர்நீச்சல்'. இந்த சீரியலானது டி.ஆர்.பி ரேட்டிங்கில் முன்னணியில் இருப்பது மட்டுமல்லாது நாளுக்கு நாள் விறுவிறுப்பான கதைக்களத்தைக் கொண்டு அதிரடித் திருப்பத்துடன் நகர்ந்த வண்ணம் இருக்கின்றது.


இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதில் கதிரிடம் கூட இருந்த நபர் "நீ குற்றாலத்தில் போய்ட்டு கூடிக் கும்மி அடித்ததும் தெரியும், உங்க அண்ணனுக்கு கூடத் தெரியாமல் இரண்டு நாள் போலீஸ் ஸ்டேஷனில் இருந்தியே அதுவும் தெரியும்" என்கிறார்.


மறுபுறம் ஜீவானந்தத்தைப்  பார்க்க சென்ற ஜனனி "ஜீவானத்தை பார்க்காமல் நான் இங்க இருந்து போக மாட்டேன்" எனக் கூறுகின்றார். அதற்கு பெரியவர் "நீங்க நினைச்ச நேரம் எல்லாம் அவரை பார்க்க முடியாது, அது யாராக இருந்தாலும் சரி" எனக் கூறி அதிர்ச்சி கொடுக்கின்றார்.  இதனைக் கேட்டதும் ஜனனியும் என்ன செய்வதென்று தெரியாமல் நிற்கின்றார்.


இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது. 


Advertisement

Advertisement

Advertisement