• Jan 19 2025

'கொல்லிமலையில் வசியம் செய்றது தான் அவங்க குடும்ப தொழில்' முனீஸ்ராஜா பற்றிய உண்மைகளை உடைத்த ராஜ்கிரண்?

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பான 'நாதஸ்வரம்' சீரியலில், சம்பந்தம் என்கிற கேரக்டரில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி ரசிகர்களிடத்தே கலக்கி வந்தவர் தான் முனீஸ்ராஜா. 

நடிகர் சண்முகராஜனின் உடன் பிறந்த தம்பியான இவர், 'நாதஸ்வரம்' தொடரில் இவரின் ஸ்டைலான நடைக்கே தனி ரசிகர் கூட்டம் உண்டு. 

அந்தத் தொடருக்குப் பிறகு ஜீ தமிழ் சேனலில் 'முள்ளும் மலரும்' என்கிற தொடரில் கதாநாயகனாக நடித்தார். பின்னர் சினிமாவுக்கு வந்து சில திரைப்படங்களிலும் நடித்தார். 

இதை தொடர்ந்து, ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் ஜீனத் பிரியாவுக்கும் முனீஸ்ராஜாவுக்கும் இடையில் காதல் மலர்ந்து இருவரும் காதலித்து வந்த நிலையில், இவர்களது திருமணத்திற்கு எதிர்ப்பு எழுந்தது. ஆனாலும் ராஜ்கிரணின் சொல்லையும் மீறி முனீஸ்ராஜாவை திருமணம் செய்தார் பிரியா.

எனினும், இவர்களது திருமண வாழ்வு ஒரு வருடம் கூட நீடிக்கவில்லை. கடந்த சில தினங்களுக்கு முன்பு, முனீஸ் ராஜாவை பிரிந்து விட்டதாக கூறிய ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் பிரியா, என்ன மன்னிச்சிடுங்க டாடி என்று வீடியோ வெளியிட்டு இருந்தார். 

இந்த நிலையில் தற்போது ராஜ்கிரன் பேட்டியொன்றில் கூறியதாக தகவல் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதில் முனீஸ் ராஜாவுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளாராம். அதன்படி அவர் கூறுகையில்,

பணக்கார குடும்பங்களை குறிவைத்து பணம் பறிப்பது தான் முனிஸ் ராஜாவ குடும்பத்தின் வேலை. இந்த செயலுக்காகவே கொல்லிமலையில் வசியம் செய்யப்பட்ட சில மருந்துகளை வாங்கி, தான் தேர்வு செய்யப்பட்ட பெண்களை சாப்பிட வைத்து, தனது கை பொம்மை ஆக்கியுள்ளார்.


இதன் காரணமாகவே அந்தப் பெண்கள் இவர்கள் சொல்லுவதை மட்டும்  செய்கிறார்கள். இவ்வாறு ஏழு எட்டு பெண்கள் வரையில் இவர்களால் ஏமாற்றப்பட்டு பணத்தை இழந்து உள்ளார்கள். 

இது தெரியாம என் பொண்ணு அவர்களிடம் மாட்டி உள்ளது. இப்போ அந்த பையன பிரிஞ்சி என் பொண்ணு கிட்டத்தட்ட ஐந்து  மாசம் ஆயிட்டு. நான்தான் இப்ப என் பொண்ணுக்கு தனியா வீடு எடுத்து வைத்து தங்க வச்சு இருக்கன்.

அந்தப் பையன் என் பொண்ணுகூட ஒழுங்கா வாழனும்னு நினைச்சிருந்தா, முறையா வச்சு வாழ்ந்து இருக்கணும். அதை விட்டு பணம் வாங்கிட்டு வா என்று டெய்லி அடிச்சு உதச்சு இருக்கக் கூடாது.  அவன் எல்லா வகையான கொடுமைகளையும் என் பொண்ணு கிட்ட செஞ்சுருக்கான்.


நான் திருமணத்துக்கு முன்பே சொன்னேன். என் எதிர்ப்பை மீறி நீங்க திருமணம் பண்ணுறீங்க.. ஒரு வருஷம் அவன் உன்னை நல்லா வச்சிருந்தா நான் உன்னை ஏற்றுக்கொள்கிறேன். இல்லன்னா என் முகத்திலேயே முழிக்காத என்று சொல்லி இருந்தேன்.

ஆனா இப்போ என் பொண்ணு அஞ்சு ஆறு மாசத்திலேயே அவனை பிரிஞ்சு வந்துட்டா. அவனோட வாழ்ந்ததெல்லாம் போதும்.. அவனோட வாழ்ந்த காலத்துல என் பொண்ணு நிறைவே பாதிக்கப்பட்டு இருக்கா. இதனை வேறொருத்தன் மூலமாகத்தான் நான் அறிந்தேன். அதற்குப் பிறகு அவரை மருத்துவமனையில் சேர்த்தேன்... இவ்வாறு ராஜ்கிரண் தெரிவித்து உள்ளாராம்.

Advertisement

Advertisement