• Apr 03 2025

ஆதி குணசேகரனின் முகத்திரையை கிழித்த ஆதிரை.. மொத்தமாக அடித்து விரட்ட நினைத்த குணசேகரனுக்கு பதிலடி கொடுத்த சக்தி

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

சன் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ சீரியலில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. 

அதில், ஆதி குணசேகரன் மகள் தர்ஷினி காணாமல் போய் பல நாட்கள் ஆன நிலையில், வீட்டில் உள்ள அனைவரும் பதட்டத்தில் இருக்கின்றார்கள்.

தர்ஷினியை தேடி மருமகள்கள் அலைந்து கொண்டிருக்க, குணசேகரன் மட்டும் எந்தவித சலனம் இல்லாமல் காணப்படுகிறார். இதனால் குணசேகரன் தான் தர்ஷினி கடத்தி வைத்து நாடகம் ஆடுகிறாரோ? என்ற சந்தேகம் தற்பொழுது எழுந்துள்ளது.


இவ்வாறான நிலையில் சக்தி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புகிறார். அவருடன் ஆதிரையும் வீட்டிற்கு வருகிறார்.

இதன்போது, ஆதிரை குணசேகரனை பார்த்து, உனக்கு தர்சினியை தேடுறதுல விருப்பம் இல்லை. நீ தர்சினியை  தேடுவதில் மும்முரம் காட்டல அதற்கு மாறா அண்ணிய திட்டுறதுல தான்  குறியாக இருக்கிறாய். என்று குணசேகரனின் முகத்திரையை கிழிக்கிறார். 

இதன்போது வீட்டை விட்டு வெளியே போ என்று குணசேகரன் திட்ட,  நாங்க எதுக்கு வெளிய போகணும் என்று சக்தி பதில் சொல்லுகிறார்.இது தான் இன்று வெளியான ப்ரோமோ..

Advertisement

Advertisement