• Jan 19 2025

எக்ஸ் லவ்வருக்கு டெய்லி I LOVE U சொல்லுவார்; அவருக்கு நான் மூன்றாவது மனைவி.. ரகசியத்தை அம்பலமாக்கிய ராஜ்கிரண் மகள்

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகளான பிரியா, நடிகர் முனீஸ் ராஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது அவரை பிரிந்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டது என ஷாக்கிங் பேட்டி கொடுத்துள்ளார்.

அதன்படி அவர் கூறுகையில், நான் இப்போ எனது கணவரை விட்டு பிரிந்து மூன்று மாதங்கள் ஆகின்றது. எங்களது  திருமணம் சட்டப்படி நடக்கவில்லை. என் கஷ்டத்துல எனக்கு டாடி தான் துணை நின்றார். ஆனா அவருக்கு இப்படி பண்ணிட்டேன்.  நிறையவே என்னை மன்னிச்சிடுங்க டாடி எனவும் கூறியுள்ளார்.

மேலும் என் கல்யாணத்துக்கு பிறகு நிறைய மன அழுத்தம் எனக்கு ஏற்பட்டது. அதனால்தான் அவருடன் ஏற்பட்ட மணமுறிவை அதிகாரப்பூர்வமாக நான் மீடியா முன்னில் அறிவித்தேன். 

முதலில் எனது கணவர் சொன்னது போல அப்படியே செய்தன் . அவர் எனக்கு நல்லது செய்வதாக எண்ணி எனது அப்பாவுக்கு எதிராக பேசினேன். ஆனால் எங்க கல்யாணம் முடிஞ்சு ஒரு மாசத்துல எங்களுக்குள்ள நிறைய பிரச்சனை ஆரம்பமானது. அதை சரி செய்ய நினைச்சேன். ஆனாலும் அவர் குடிச்சிட்டு வந்து என்னை அடித்து கொடுமைப்படுத்துவார். காலையில் எதுவுமே அவருக்கு நினைவில் இருக்காது. 


எங்கையாவது போய் ஒரு கோடி, நாலு கோடி ரூபாய் காசு வாங்கிட்டு வா என்று சொல்லுவார். இருந்தும் அவருக்கு சப்போர்ட்டா நிறைய விஷயங்கள்ல அவர் சொன்னது எல்லாம் செய்திருக்கன். அதற்குரிய ஆதாரங்களும் என்கிட்ட இருக்குது. 

நான் என்ட லைப்ப காப்பாத்திக்கனும் என்பதற்காக தான் நிறைய விஷயத்தில் அமைதியாக இருந்தன். ஒரு கட்டத்துல எனக்கு நிறைய மிரட்டல்கள் தந்தார். எனது அம்மாவை கேவலப்படுத்துவேன், எனக்கு ஆதரவாக இருந்த என்டிஆர் மனைவியை அசிங்கப்படுத்துவேன் என்று பயமுறுத்தி தான் என்ன வச்சிருந்தாரு. 


அவர்களுக்காக அமைதியாய் இருந்த நான், கடைசில என்ட வாழ்க்கையை காப்பாத்தணும் என்று தான் வெளியில வந்துட்டேன். எனக்கு ஒரு கட்டத்தில் மன அழுத்தம் அதிகமாகி மருத்துவமனைக்கு சிகிச்சை எடுத்துக்கொள்ள தொடங்கினேன். 

அவருக்கு ஏற்கனவே ஒரு பெண்ணுடன் சட்டப்படி முறையான கல்யாணம் நடந்தது. இதை என்னிடம் சாதுவாகவே சொன்னார். எனக்கு அதிர்ச்சியாக இருந்துச்சு. 

அத்துடன்  அவரது இரண்டாம் மனைவிக்கு முன்னர் முதலில் ஒரு பெண்ணை கல்யாணம் செய்தார். ஆனால் அந்தப் பெண்ணை லீகலாக திருமணம் செய்யாததால் பாதியிலையே அவரை விரட்டி விட்டார். 

அதற்கு அப்புறம் நான் மூன்றாம் மனைவியாக இருந்தது எனக்கு தெரிந்தது. நான் இருக்கும் போதே அவரது எக்ஸ் லவ்வர் உடன் போனில் பேசி இருக்கார். அவருக்கு ஐ லவ் யூ சொல்லி வெட்கமே இல்லாம கதைச்சி இருக்கார். அதற்கான ஆதாரங்களும் தற்போது என்னிடம் இருக்குது... என்று தனது வேதனையை கூறியுள்ளார்.

Advertisement

Advertisement