• Jan 15 2025

மாமியாருக்கு வீட்டிற்குள்ளையே கோவில் கட்டிக் கொடுத்த ராஜ்கிரண்! வியக்கவைக்கும் ஹோம் டூர்

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் என் ராசாவின் மனசிலே என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர்தான் ராஜ்கிரண். இந்த படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்ததோடு வெள்ளி விழாவும் கண்டது. மேலும் அவருக்கு தமிழக அரசின் விருதும் கிடைத்தது.

முதலாவது படமே மாஸ் ஹிட் அடித்ததால் ராஜ்கிரனுக்கு மவுஸ் எகிறியது. பின்னர் இயக்குனராக அவதாரம் எடுத்தவர் அரண்மனைக்கிளி, எல்லாமே என் ராசாதான் போன்ற படங்களை இயக்கி அதில் ஹீரோவாகவும் நடித்தார்.

ராஜ்கிரனின் முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்தது. அவர் இரண்டாவதாக ஜோதி என்பவரை திருமணம் செய்தார். இவருக்கு நையினார் முகமது, ஜீனத் பிரியா என்ற இரு பிள்ளைகள் உள்ளார்கள்.


இந்த நிலையில், ராஜ்கிரனின் ஹோம் டூர் வீடியோ ஒன்று தனியார்  யூட்யூப் சேனல் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ராஜ்கிரனின் மனைவி அவரது பிரம்மாண்ட வீட்டை சுற்றி காட்டியுள்ளார்.

அதில் ராஜ்கிரணின் பங்களாவை சுற்றி மரங்கள் நிறைந்துள்ளது. அவர் இயற்கை மீது அன்பு கொண்டதால் மரங்களுடனும் பேசுவார் என்று ராஜ்கிரன் மனைவி கூறியுள்ளார். அது மட்டும் இன்றி வீட்டிற்கு உள்ளையே ஒரு கோவில் உள்ளது.

குறித்த கோவில் தனது மாமியாருக்காக ராஜ்கிரன் கட்டிக் கொடுத்துள்ள கோவிலாம். சுமார் நூறு வயதுக்கு மேலாகும் ராஜ்கிரணின் மாமியார் கடவுள் பக்தி கொண்டவர் என்பதால் அவருக்கு வீட்டிற்கு உள்ளேயே அழகிய கோவிலை கட்டிக் கொடுத்துள்ளார். இந்த கோவிலில் இந்து, கிறிஸ்த்தவம், இஸ்லாம் என்ற மூன்று மதத்தை சேர்ந்த கடவுள்களையும் வழிபடும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.


Advertisement

Advertisement