சென்னை முழுவதும் மிக்ஜாம் புயலினால் அநேகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் பலரும் தங்கள் உடமைகளை இழந்து உணவு ,நீர் இன்றி கஷ்ட்டபடுகின்றனர். இந்நிலையில் பல்வேறு பகுதிகளில் தற்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கான உணவுகள் வழங்கபட்டு வருகிறது. மீட்டு பணிகளும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பிரச்சனை குறித்து பேசியுள்ளார். அதில் அவர். அலட்சியம் தவறான நிர்வாகம் மற்றும் பேராசை போன்றவை மழைநீர் மற்றும் கழிவு நீரை ஒரே கால்வாயில் கொட்டுவதற்கு வழிவகுத்துவிட்டது. அதனாலேயே ஒவ்வொரு முறையும் ஆறுபோல் எங்கள் குடியிருப்புகளை மழைநீர் தாக்குகிறது.
இந்த நேரத்தில் ஏதேனும் நோய் அல்லது மருத்துவ அவசரநிலை ஏற்பட்டு மரணத்தை கொண்டு வருகிறது. மீட்புப் பணிகளுக்காக என்னிடம் ஒரு படகு மற்றும் பல பம்புகள் இருக்கிறது. மக்களை தொடர்பு கொள்ளவும் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறேன் என்று சந்தோஷ் நாராயணன் ட்வீட் செய்திருந்தார்.
அதேபோல சந்தோஷ் நாராயணனிடம் நேர்காணலில் கேட்ட போது அவர் இவ்வாறு பதிலளித்திருந்தார். ஒவ்வொரு வருடம்மும் இதே போல தான் நடக்கிறது, இங்க இருக்கிற மக்கள் எல்லாரும் இணைந்து உதவி செய்கிறோம், நிறைய மனு கொடுத்தாச்சி எந்த ரெஸ்போன்சும் இல்ல, எல்லா மக்களும் பாவம் தான் இங்கயும் கொஞ்சம் பாருங்க தண்ணி , கரண்ட் , சாப்பாடு இல்லாம இருக்கிறோம். இந்த முறை சரியான மோசமா இருக்கு என்று பேட்டி அளித்திருந்தார்.
Listen News!