• Jan 19 2025

திரும்பவும் வில்லியாக மாறிய ராதிகா, என்ன செய்வதென்று குழப்பத்தில் இருக்கும் கோபி, வெட்கத்தில் அமிர்தா- Baakiyalakshmi Serial

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

அமிர்தாவும் எழிலும் துாங்கிக் கொண்டிருக்கின்றனர். பின்னர் எழில் முதலாவதாக எழும்பி குளித்து விட்டு வந்திருக்க அமிர்த எழும்பி லேட் ஆகிட்டுது என்று புலம்ப, எழில் அதெல்லாம் ஒன்றுமில்லை நீ பொறுமையாக இரு என்று சொல்கின்றார். தொடர்ந்து கீழே எழில் வருகின்றார். அப்போது எல்லோரும் கீழே உட்கார்ந்து இருக்கின்றனர்.


எழிலைக் கண்டதும் கோபி நலம் விசாரிக்கின்றார். தொடர்ந்து எனக்கு என்கிட்ட ஏதாவது பேசனும் என்றால் பேசு என்று சொல்ல அந்த நேரம் அங்கு செழியனும் வந்து உட்காருகின்றார்.அப்போது செழியன் இன்டைக்கு கோட்டுக்கு போகனும் என்று சொல்ல, ஈஸ்வரி பாக்கியாவோட தனியப் போக வேணாம் கோபியும் நானும் கூட வருகின்றோம் என்று சொல்கின்றார்.

இதனால் கோபி ரெடி ஆகிட்டு வாறேன் என்று மேலே போகின்றார்.அங்கு ராதிகாவிடம் கோட்டுக்கு போகின்றேன்,பாக்கியாவுக்கு ஒன்றும் தெரியாது. அதான் செழியன் விஷயமாகப் போகின்றேன் என்று சொல்ல, ராதிகா ஓவராக நீங்க எல்லா விஷயத்திலையும் மூக்கு நுழைக்காதீங்க.


அவங்களுக்கு சர்ப்போட் பண்ண ஆளுகள் இருக்கிறாங்க,அப்பிறம் நீங்க எதுக்கு என்று நக்கலாகப் பேசுவதோடு இன்டைக்கு மட்டும் போங்க, இனிமேல் அவங்க விஷயத்தில அளவோட இருங்க என்று சொல்லி விட்டு போகின்றார். தொடர்ந்து செழியனைக் கூட்டிக் கொண்டு கோட்டிற்கு வருகின்றனர்.

அங்கு ஜெனியின் அப்பாவும் ஜெனியும் வருகின்றனர். அவர்கள் இருவரும் செழியன் கிட்ட பேசாமல் போவதைப் பார்த்த ஈஸ்வரி, ஜெனிக்கு அவ்வளவு கொளுப்பா எதுவுமே பேசாமல் போற எனத் திட்டுகின்றார்.மறுபுறம் வீட்டில் ராமமூர்த்தி நிலாவுடன் விளையாடிட்டு இருக்கின்றார்.இதைப் பார்த்த அமிர்தா எதுவும் பேசாமல் மீண்டும் மேலே சென்று விடுகின்றார்.


ரூமுக்குள் அமிர்தா தனியாக இருப்பதைப் பார்த்த ராதிகா அட்வைஸ்ட் பண்ணுகின்றார். உன்னில எந்தத் தப்பும் இல்லை, கணேஷிற்கு இன்னொரு வாழ்க்கை கிடைக்கும். இது தான் உன்னோட வாழ்க்கை இது தான் உன் குடும்பம், இந்த வாழ்க்கைல நீ சந்தோசமாகத் தான் வாழப்போற போசிக்காத எல்லாமே நல்லதா நடக்கும் என்று கூறிவிட்டு போகின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.


 

Advertisement

Advertisement