• Jan 18 2025

நுரையீரல் தொற்று காரணமாக பிரபல தயாரிப்பாளர் காலமானார்...!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

"குடிசை" என்ற திரைப்படத்தினை தயாரித்து சினிமா உலகில் பிரபலமானவர் ஜெயபாரதி. இவர் திரைப்பட இயக்குநரும்,  எழுத்தாளருமாக விளங்கினார்.


திரைத்துறைக்கு வருவதற்கு முன்பு பத்திரிகையாளராகப் பணியாற்றிய இவர் நண்பா நண்பா, உச்சி வெயில், ஊமை ஜனங்கள், ரெண்டும் ரெண்டும் அஞ்சு உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார். இவர் கடைசியாக கடந்த 2010ஆம் ஆண்டு ‘புத்திரன்’ என்ற படத்தை இயக்கினார்.


d_i_a

இப்படத்துக்கு தமிழக அரசின் 3 விருதுகள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இத்தகைய சூழலில் தான் இவர் நுரையீரல் தொற்று காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசினர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.


அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி 77 வயதான இவர் இன்று காலை 6 மணியளவில் உயிரிழந்தார். இவரது மறைவுக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 





Advertisement

Advertisement