• Sep 20 2024

உங்களுக்கு மனைவியா இருப்பதில் பெருமை… கணவனை புகழ்ந்த சாயிஷா

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் மாஸ் நடிகர் தான் ஆர்யா. இவர் நடிப்பில் இறுதியாக வெளியாகிய சார்பாட்டா பரம்பரை மற்றும் ரெடி போன்ற திரைப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதால் இவருடைய படங்களுக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துக் காணப்படுகின்றது.

சார்பட்டா பரம்பரை படத்தில் குத்துச்சண்டை வீரராக மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் ஆர்யா. இந்நிலையில் நடிகர் ஆர்யாவை அவரது மனைவியான சாயிஷா புகழ்ந்து பேசியுள்ளார்.

மேலும் இதுதொடர்பாக அவர் ஷேர் செய்துள்ள இன்ஸ்டா போஸ்ட்டில் ஆர்யாவை கணவராக பெற்றதில் பெருமை கொள்வதாக தெரிவித்துள்ளார்.

நடிகர் ஆர்யாவுக்கும் நடிகை சாயிஷாவுக்கும் கஜினிகாந்த் படத்தில் நடித்த போது காதல் மலர்ந்தது. இதையடுத்து இருவரும் கடந்த 2019ஆம் ஆண்டு இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

இந்நிலையில் நடிகர் ஆர்யாவை அணைத்தப்படி இருக்கும் புகைப்படத்தை ஷேர் செய்துள்ள சாயிஷா, உங்களுக்கு மனைவியாக இருந்து நீங்கள் ஜொளிப்பதை பார்ப்பதில் ரொம்ப பெருமை என்று கூறியுள்ளார். மேலும் நேற்று இரவு நடைபெற்ற நிகழ்ச்சியில் சார்பட்டா பரம்பரை படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருது கிடைத்ததையும் குறிப்பிட்டுள்ளார் சாயிஷா.

Advertisement

Advertisement