• May 20 2024

இணையத்தில் தீயாய் பரவும் ப்ரியா பவானி சங்கரின் லேட்டஸ் கிளிக்

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ப்ரியா பவானி சங்கர். இவர் முதலில் சின்னத்திரையில் இருந்தே பின்னர் வெள்ளித்திரைக்கு வந்தார். அந்தவகையில் 'மேயாத மான்' என்ற படத்தின் மூலமே கதாநாயகியாக முதன் முதலில் அறிமுகமானார். 


படங்களில் மட்டுமன்றி வெப் தொடர்களையும் விட்டு வைக்காத இவர் 'டைம் என்ன பாஸ்' உள்ளிட்ட பல வெப் தொடர்களில் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்தோடு திரையில் இவரின் ஆரம்பம் சீரியலில் இருந்து தான் தொடங்கியது. அந்தவகையில் 'கல்யாண முதல் காதல் வரை' என்னும் சீரியல் மூலமே முதலில் தோன்றி இருந்தார்.


இதனைத் தொடர்ந்து விஜய் டீவியில் ஒளிபரப்பான 'ஜோடி நம்பர் ஒன் சீசன் 5, தென்னிந்திய ஃபிலிம் பெயர் விருது, சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 5, கிங்ஸ் ஆப் டான்ஸ் சீசன் 1' போன்ற ஷோக்களில்  தொகுப்பாளராக பணியாற்றியிருக்கின்றார்.


இவர் தன்னுடைய அறிமுகப் படத்தைத் தொடர்ந்து பின்னர் 'கடைக்குட்டி சிங்கம், கசடதபற' உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தார். அதற்கு முன்னதாக 'மாபியா அத்தியாயம் ஒன்று, களத்தில் சந்திப்போம், தங்கும் விடுதி' உள்ளிட்டவற்றிலும் தோன்றியுள்ளார். 


அதுமட்டுமல்லாது சமீபத்தில் அருண் விஜய் மற்றும் தனுசுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.  இந்நிலையில் இவரது லேட்டஸ் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதோ பாருங்க...


Advertisement

Advertisement