• Jan 15 2025

மனைவி இந்துவுக்கு மறுபடியும் தாலி கட்டிய பிரேம்ஜி.. வைரல் வீடியோ..!

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

நடிகர் மற்றும் இசையமைப்பாளர் பிரேம்ஜி கடந்த சில மாதங்களுக்கு முன் இந்து என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது மீண்டும் தனது மனைவி இந்துவுக்கு தாலி கட்டிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இசையமைப்பாளர் மற்றும் இயக்குனர் கங்கை அமரன் இளைய மகன் பிரேம்ஜி நீண்ட வருடங்களாக திருமணமே செய்யாமல் பேச்சுலராக இருந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் இந்து என்ற பெண்ணை திருமணம் செய்தார் என்பதும் திருமணம் குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆனது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

திருமணத்துக்கு முன் ஜாலியாக சிங்கிளாக இருந்த பிரேம்ஜி திருமணத்திற்கு பின் முற்றிலும் மாறி விட்டார் என்பதும் பொறுப்புள்ள ஒரு குடும்பஸ்தராக மாறிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் பிரேம்ஜி தனது மனைவி இந்துவுக்கு தாலி பிரித்து கோர்க்கும் நிகழ்ச்சியை நடத்திய நிலையில் அந்த நிகழ்ச்சியில் அவர் தனது மனைவி இந்துவுக்கு மீண்டும் தாலி கட்டிய வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோ இந்துவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பிரேம்ஜி - இந்து தம்பதிக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement