• Aug 18 2025

நல்ல கம்பெனி டீசர்ட் வாங்கிப் போடுங்க... வொர்க்-அவுட் செய்யும் சினேகாவுக்கு ரசிகர்கள் அறிவுரை..!

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை சினேகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டீ சர்ட் அணிந்து வொர்க்-அவுட் செய்த வீடியோவை பதிவு செய்துள்ள நிலையில் ’அடுத்த முறை நல்ல கம்பெனி டீ சர்ட் வாங்கி அணியுங்கள்’ என்று ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் அவருக்கு அறிவுரை கூறியுள்ளனர்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் சினேகா என்பதும் குறிப்பாக கடந்த 2000ஆம் ஆண்டுகளில் அவர் விஜய், சூர்யா உள்பட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தார் என்பதும் தெரிந்தது.

இதனை அடுத்து திருமணத்திற்கு பின்னர் நடிப்பதை குறைத்துக் கொண்டாலும் தற்போது சில படங்களில் அவர் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பாக விஜய் நடித்துள்ள ’கோட்’ திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாகவே நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் பிரபலமாக இருக்கும் சினேகாவுக்கு இரண்டு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் இருக்கும் நிலையில் அவ்வப்போது தனது குடும்ப புகைப்படம், பிசினஸ் புகைப்படம் ஆகியவற்றை பதிவு செய்து வருவார். அந்த வகையில் சற்று முன் அவர் ஜிம்மில் வொர்க்-அவுட்  செய்யும் வீடியோவை பதிவு செய்துள்ளார்.

அந்த வீடியோ சினேகா டி-ஷர்ட் அணிந்து சுவரில் சாய்ந்து உட்கார்ந்து இருந்த நிலையில் அவர் எழுந்திருக்கும் போது அவருடைய டீசர்ட்டில் பிரிண்ட் செய்யப்பட்ட எழுத்துக்கள் சுவரில் ஒட்டியிருந்தது. இதை பார்த்த ரசிகர்கள் அடுத்த தடவை நல்ல கம்பெனி டீ சர்ட் வாங்கி போடுங்க என்று கமெண்ட்ஸ்களை பதிவு செய்துள்ளனர்.


Advertisement

Advertisement