• Jun 30 2024

சினிமா ஸ்டார் கேரக்டரில் பிரபுதேவா.. ‘பேட்ட ராப்’ டிரைலர் ரிலீஸ்..!

Sivalingam / 1 week ago

Advertisement

Listen News!

பிரபுதேவா நடித்த ’பேட்ட ராப்’ என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீசாக உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி உள்ள நிலையில் அந்த ட்ரெய்லர் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த படத்தில் பிரபுதேவா ஒரு நடிகராக நடித்திருப்பது போல் தெரிகிறது. இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்ற அடைமொழியுடன் அறிமுகமாகும் அவரை திரையில் பார்த்து ரசிகர்கள் கொண்டாடுவது போன்றும், திரை உலகில் ஒரு பெரிய ஸ்டார் ஆக அவர் ஜொலிப்பது போன்ற காட்சிகள் உள்ளன.

பாட்டு, நடனம், அதிரடி ஆக்சன், ஆட்டம் என அனைத்து திறமைகளும் கொண்ட நடிகராக அவர் இந்த படத்தில் நடித்துள்ளார். அதிரடி ஆக்சன் காட்சிகள், நளினமான நடனங்கள், வேதிகாவுடன் ரொமான்ஸ் மற்றும் காமெடி என அனைத்து அம்சங்களும் இந்த படத்தில் உள்ளது என்பது ட்ரெய்லரில் இருந்து தெரிய வருகிறது.

பிரபுதேவா ஜோடியாக வேதிகா இந்த படத்தில் நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு அவர் தமிழில் ரீஎண்ட்ரி ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விவேக் பிரசன்னா, பகவதி பெருமாள், மைக் கோபி, ரியாஸ் கான் உட்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். சினி இயக்கத்தில், டி இமான் இசையில் உருவாகிய இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படம் நிச்சயம் ஒரு வெற்றி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

Advertisement