• Jan 19 2025

’மலர்’ சீரியலில் இருந்து திடீரென வெளியேறிய நடிகை.. கர்ப்பம் காரணமா? புதிய நடிகை யார்?

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’மலர்’ என்ற சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்துக் கொண்டிருந்த நடிகை திடீரென வெளியேறி விட்டதாகவும் அவருக்கு பதில் ’மோதலும் காதலும்’ சீரியலில் நடித்த நடிகை இணைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

சன் டிவியில் பகல் நேரத்தில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று ’மலர்’ என்பதும் இந்த சீரியல் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது என்பதும் தெரிந்தது. இந்த நிலையில் இந்த தொடரில் நடிகை பிரீத்தி சர்மா முக்கிய வேடத்தில் நடித்து கொண்டிருந்த நிலையில் திடீரென அவர் விலகி விட்டதாகவும் அவருக்கு பதில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ’மோதலும் காதலும்’ தொடரில் நடித்த அஷ்வதி கமிட் ஆகி இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

இதுகுறித்து சேனல் வட்டாரத்தில் விசாரித்தபோது ’மலர்’ சீரியலில் நடித்துக் கொண்டிருந்த பிரீத்தி சர்மா சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசை கொண்டு இருந்ததாகவும், அதனால் சினிமாவில் நடிக்க முயற்சி எடுப்பதற்காக அவர் சீரியலில் இருந்து விலகி விட்டதாகவும் கூறுகின்றனர்.



ஆனால் இன்னும் சில அவர் விலகியதற்கான காரணம் குறித்து கூறியபோது ’மலர்’ சீரியலில் அவருடைய கேரக்டர் கர்ப்பம் ஆவது போல் சில காட்சிகள் வருவதாகவும், ஆனால் ப்ரீத்தி  கர்ப்பிணி ஆக நடிக்க தயக்கம் காட்டியதாகவும், அதனால்தான் இந்த சீரியல் இருந்து விலகி விட்டதாகவும் கூறுகின்றனர். இந்த இரண்டில் ஏதாவது ஒன்று உண்மையா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது உறுதியாக தெரியவில்லை.

நடிகை ப்ரீத்தி சர்மா கலர்ஸ் தொலைக்காட்சியில் ’திருமணம்’ என்ற சீரியலில் அறிமுகமாகி அதன் பின்னர் சன் டிவியில் ’சித்தி 2’ சீரியலில் வெண்பா கேரக்டரில் நடித்தவர் என்பதும் இந்த இரண்டு சீரியலும் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரை கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. ’மலர்’ தொடரிலும் அவருக்கு சிறப்பான கேரக்டர் அளிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் திடீரென அந்த தொடரில் இருந்து விலகி இருப்பது ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

பிரீத்தி ஷர்மாவுக்கு பதிலாக அஷ்வதி நடிக்க இருக்கும் நிலையில் அவர் எப்படி அந்த கேரக்டரை கையாள்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement