• Jul 23 2024

’கல்கி 2898ஏடி’ முதல் நாள் ரூ.180 கோடி என்பது பொய்.. உண்மை வசூலை வெளியிட்ட தயாரிப்பாளர்..!

Sivalingam / 3 weeks ago

Advertisement

Listen News!

பிரபாஸ் நடித்த ’கல்கி 2898ஏடி’ திரைப்படம் நேற்று வெளியான நிலையில் இந்த படம் நல்ல வரவேற்பு பெற்றது என்பதும் குறிப்பாக தெலுங்கானா மற்றும் ஆந்திரா ஆகிய இரண்டு மாநிலங்களிலும் மிகப்பெரிய வசூல் சாதனை செய்தது என்றும் செய்திகள் வெளியானது.

மேலும் இந்த படம் முதல் நாள் இந்தியாவில் ரூ.95 கோடியும் உலக நாடுகளில் ரூ.85 கோடியும் வசூல் ஆனதாகவும் மொத்தத்தில் முதல் நாள் 180 கோடி வசூல் ஆனதாகவும் ஊடகங்களில் செய்திகள் பரவின.

இந்த நிலையில் ’கல்கி 2898ஏடி’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான வைஜெயந்தி மூவிஸ் சற்று முன் தனது சமூக வலைத்தளத்தில் இந்த படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதனை அடுத்து உலகம் முழுவதும் இந்த படத்தின் முதல் நாள் வசூல் ரூ.191.50 கோடி என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் நாளே இந்த படம் கிட்டத்தட்ட 200 கோடி வசூலை நெருங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் சுமார் 300 கோடி வசூல் செய்தால் நான்கு நாட்களில் மொத்தம் 500 கோடி ரூபாய் வசூல் செய்ய வாய்ப்பு இருப்பதாக திரையுலக வட்டாரங்கள் கூறுகின்றன.


Advertisement

Advertisement