• Jul 01 2025

கவின் ஜோடியாக நடிக்கும் விராத் கோஹ்லி மனைவி அனுஷ்காவின் உறவினர்.. எங்கேயோ மச்சம் இருக்குது..!

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் கவின் நடித்த 'ஸ்டார்’ திரைப்படத்தின் வெற்றிக்கு பின்னர் அவர் ஒரே நேரத்தில் பல படங்கள் நடித்து வருகிறார் என்பதும் அவற்றில் ஒன்று வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகி வரும் ’மாஸ்க்’ என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லியின் மனைவி நடிகை அனுஷ்கா ஷர்மாவின் நெருங்கிய உறவினர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நடிக்கும் படத்தில் முக்கிய இடத்தில் ஆண்ட்ரியா நடிக்கிறார் என்றும் அவரது கேரக்டர் நெகட்டிவாக இருக்கும் என்றும் கூறப்பட்டது. ’மாஸ்க்’ என்ற டைட்டில் வைக்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி இருக்கும் நிலையில் இந்த படத்தில் தற்போது கவின் ஜோடியாக ருஹானி ஷர்மா என்பவர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் விராத் கோலியின் மனைவி அனுஷ்கா ஷர்மாவின் நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.



கடந்த 2017 ஆம் ஆண்டு ’கடைசி பெஞ்ச் கார்த்தி’ என்ற திரைப்படத்தில் ருஹானி ஷர்மா நடித்திருந்தார் என்பது அதன் பிறகு தற்போது ஏழு வருடங்கள் கழித்து தான் மீண்டும் தமிழுக்கு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பல தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்த ருஹானி ஷர்மா, கவின் ஜோடியாக நடிக்க இருப்பதை அடுத்து கவினுக்கு எங்கேயோ மச்சம் இருக்குது என கோலிவுட் திரையுலகினர் கூறி வருகின்றனர்.

நடிகர் கவின் ஏற்கனவே நடன இயக்குனர் சதீஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ’கிஸ்’ நெல்சன் தயாரிப்பில் உருவாகி வரும் ’ப்ளடி பெக்கர்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement