• Jan 19 2025

36 வயது நடிகைக்கு மார்பக புற்றுநோய்.. உயிருக்காக போராடுகிறாரா?

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

36 வயது பிரபல நடிகைக்கு மார்பக புற்றுநோய் என்றும் அவர் உயிருக்காக போராடுகிறார் என்றும் சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் இது குறித்து அந்த நடிகை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகை மற்றும் பிக் பாஸ் ஹிந்தி போட்டியாளர் ஹினா கான் என்பவர் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தற்போது சிகிச்சை பெற்று வந்தாலும் அவரது உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளதாகவும் வதந்திகள் பரவி வருகிறது.

இதனை அடுத்து ஹினாகான்,  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நான் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது உண்மைதான் என்றும் எனக்கு மூன்றாவது ஸ்டேஜில் அந்த நோய் உள்ளது என்றும் ஆனால் அதே நேரத்தில் எனது உயிருக்கு எந்தவிதமான ஆபத்தும் இல்லை என்றும் நான் குணம் ஆவதற்காக சிகிச்சை பெற்று வருகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த நோயை எதிர்த்து நான் போராடி வருகிறேன் என்றும் சீக்கிரமே குணமாகி ரசிகர்களை மகிழ்விக்க தொடர்ந்து நடிப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் என்னுடைய நோய் முழுமையாக குணமடைய ரசிகர்கள் எனக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தாலும் நான் மனதளவில் துவண்டு விடவில்லை என்றும் சிறப்பான மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்று வருகிறேன் என்றும் அவர் கூறியுள்ளதை அடுத்து அவர் விரைவில் குணமாக வேண்டும் என்று ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

Advertisement

Advertisement