• Dec 06 2024

வேட்டையன் படத்தை தோல்வி படமாக்க கங்கணம் கட்டும் பிரபலம்! குவியும் ட்விட்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வெளியாகும் திரைப்படங்களை தொடர்ந்து விமர்சித்து வருவதில் ப்ளூ சட்டை மாறன் முதல் இடத்தில் காணப்படுகின்றார். இவர் படங்களை மட்டும் இல்லாமல் தனிப்பட்ட ரீதியாகவும் நடிகர்களை, இயக்குனர்களை சீண்டி வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

சமீபத்தில் வெளியான கோட் திரைப்படத்தை கடுமையாக விமர்சித்தது போலவே தற்போது நேற்றைய தினம் வெளியான ரஜினிகாந்தின் வேட்டையன் படத்தையும் மரண கலாய் கலாய்த்து வருகின்றார். அத்துடன் ரஜினி ரசிகர்களையும் கலாய்த்து வருகின்றார்.

ஏற்கனவே தேவி தியேட்டரில் வேட்டையன் படத்தை பார்த்த விஜய் படம் முடிந்ததும் வடிவேலு பாணியில் அப்பாடா.. என சொல்லி பெருமூச்சு விடுவது போல போட்டோ ஒன்றை பகிர்ந்து ட்ரோல் செய்திருந்தார். இதனை விஜய் ரசிகர்களை அதிகமாக ஷேர் செய்து ரஜினி ரசிகர்களுடன் மோதி வந்தார்கள்.


மேலும், ஹீரோக்களின் படங்கள் சூப்பர் என்று தான் ரசிகர்கள் சொல்லுவார்கள். ஆனால் அப்படிப்பட்ட ரசிகர்களையே வெறுப்பேத்திட்டாங்க... சூப்பர் ஸ்டார் பேர்ல டீ ஷர்ட் எல்லாம் போட்டுக்கிட்ட இவர்களுக்கு இந்த நிலைமைதான்.. பொதுமக்கள் கதி என தற்போது ட்விட் ஒன்றை போட்டு வேட்டையன் படத்திற்கும் வேட்டு வைக்க முயற்சித்து வருகின்றார்.

இதேவேளை வேட்டையன் படத்தை எப்படியாவது தோல்வி படமாக அறிவிக்க வேண்டும் என்று விஜய் மற்றும் இது ப்ளூ சட்டை மாறன் தனது பங்களிப்பை கொடுத்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement