• Dec 04 2024

Rugged Boy ஆ? Chocolate Boy ஆ? குட் பேட் அக்லி படத்தில் வெளியான அஜித்தின் கெட்டப்..

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகராக வலம் வருபவர்தான் நடிகர் அஜித். இவர் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி   ஆகிய படங்களில் நடித்து வருகின்றார். இதில் விடாமுயற்சி படம் விரைவில் ரிலீசுக்கு தயாராகவும் உள்ளது.

குட் பேட் அக்லி படத்திற்காக வெளி நாட்டில் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார் அஜித் குமார். இவருடன் அஜித்தின் குடும்பத்தினரும் தங்கி உள்ளதாக கூறப்படுகின்றது.

ஆவிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்படுகின்றது. காரணம் இதில் அஜித் மூன்று தோற்றங்களில் நடிக்கின்றாராம். தற்போது படப்பிடிப்பு ஸ்பெயினில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.


சமீபத்தில் கைகளில் டாட்டுவுடன் இருக்கும் அஜித்தின் புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி இருந்தது. இந்த தோற்றம் அஜித் ரசிகர்களை கவர்ந்ததுடன்  குட் பேட் அக்லி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற செய்தது. அத்துடன் வெளிநாட்டில் நடைபெறும் ஷூட்டிங் காட்சிகளும் இணையத்தில் வெளியாகியிருந்தது.

இந்த நிலையில், தற்போது அஜித் குமாரின்  குட் பேட் அக்லி படத்திற்கான புதிய லுக்கை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் பகிர்ந்துள்ளார். அதில் பார்க்கவே மிகவும் இளமையான தோற்றத்தில் ஹேண்ட்ஸ்மாக அஜித்குமார் காணப்படுகின்றார். இது பலரையும் கவரும் என்பதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை.

Advertisement

Advertisement