• Apr 15 2026

பணப்பெட்டியுன் வெளியேறிய பூர்ணிமாவுக்கு கிடைத்த அமோக வரவேற்பு- குத்தாட்டம் போட்டு செம சந்தோசத்தில் இருக்கிறாரே- வைரலாகும் வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!


இந்த வாரம் முழுவதும் பரபரப்பாக இருந்த பிக்பாஸ் வீடு இப்போது கொஞ்சம் அமைதி அடைந்திருக்கிறது. அதாவது போட்டியாளர்களுக்கு கத்தை கத்தையாய் பணத்தை காட்டிய பிக்பாஸ் இறுதியாக 16 லட்சம் பணப்பெட்டியை வைத்தார்.

இதுதான் சமயம் என காத்திருந்த பூர்ணிமா அலேக்காக பெட்டியை தூக்கிக்கொண்டு பிக்பாசுக்கு டாட்டா காண்பித்து இருக்கிறார். அதை தொடர்ந்து நாளை யார் வீட்டை விட்டு வெளியேறப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு இப்போது அதிகமாக இருக்கிறது.


அதுமட்டுமின்றி இதுவரை நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன்களில் அதிகபட்ச தொகையுடன் கூடிய பணப்பெட்டியோடு வெளியேறிய போட்டியாளர் என்கிற பெருமையையும் பூர்ணிமா பெற்றுள்ளார்.

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பூர்ணிமாவுக்கு மாலை அணிவித்து மரியாதையாக வரவேற்றுள்ளனர். அப்போது பூர்ணிமாவும் குத்தாட்டம் போட்டுக் கொண்டு உள்ளே சென்றுள்ளார். இது குறித்த வீடியோவும் வைரலாகி வருவதைக் காணலாம்.



Advertisement

Advertisement