• Feb 23 2025

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பூர்ணிமா முதன்முதலாக வெளியிட்ட போட்டோ- யாரெல்லாம் நிற்கிறாங்க தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!


பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. அந்நிகழ்ச்சி முடிவடைய இன்னும் ஒரு வாரமே எஞ்சி உள்ளதால், யார் டைட்டில் வின்னர் ஆவார்கள் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது. 

 இந்த வாரம் பணப்பெட்டி கொண்டுவரப்பட்டது. பணத்தின் மதிப்பு ஏற ஏற இதை யார் எடுக்கப்போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. இதனிடையே பூர்ணிமா பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறி இருக்கிறார். 


அவர் 16 லட்சம் தொகையுடன் கூடிய பணப்பெட்டியோடு வெளியேறி இருப்பதை பார்த்த ரசிகர்கள் இது ஸ்மார்ட் மூவ் என பூர்ணிமாவை பாராட்டி வருகின்றனர்.

அதுமட்டுமின்றி இதுவரை நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன்களில் அதிகபட்ச தொகையுடன் கூடிய பணப்பெட்டியோடு வெளியேறிய போட்டியாளர் என்கிற பெருமையையும் பூர்ணிமா பெற்றுள்ளார்.


இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பூர்ணிமா தன்னுடைய குடும்பத்துடன் இணைந்து முதன்முதலாக போட்டோ எடுத்துள்ளார்.இந்தப் போட்டோ ரசிகர்களிடம் வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement