• Jan 19 2025

பிக்பாஸில் வெளியேறிய நிக்சன் ஐஷுவை நினைத்து செய்த காரியம்! வைரலாகும் இன்ஸ்டா பதிவு

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 7 இல் இறுதியாக வெளியேறியவர்கள் தான் நிக்சன், ரவீனா ஆகியவர்கள். அதுபோலவே இந்த வாரம் 16 லட்சங்களுடன் பூர்ணிமா பிக் பாஸில் இருந்து வெளியேறினார்.

பிக் பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் சர்ச்சைக்குரிய காதல் ஜோடியாக வலம் வந்தவர்கள் தான் நிக்சன், ஐஸ்வர்யா ஜோடி. இவர்கள் செய்த காதல் லீலைகள் எல்லை மீறி ஐஷுவின் பெற்றோர் பிக் பாஸ் செட்டுக்கே நேராக சென்று தம் பிள்ளையை வெளியே விடுமாறு கேட்டு இருந்தனர்.


அதுபோலவே அடுத்த வாரம் ஐஷு எலிமினேட் செய்யப்பட்டு வீட்டுக்கு புறப்பட்டார். அவரின் பிரிவால் நிக்சன் சிறிது காலம் அழுது புலம்பினாலும் அதற்கடுத்த நாட்களில் கொடுக்கப்பட்ட டாஸ்க்களை சிறப்பாக செய்து இருந்தார்.

எனினும், கடந்த ஒரு வாரங்களுக்கு முன்னர் அவரும் எலிமினேட் செய்யப்பட்டு பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார்.

இந்த நிலையில்,  பிக்பாஸில் இருந்து வெளியேறிய நிக்சன் ஐஸ்வர்யா ரசிகர்கள் பக்கத்தில் வெளியிடப்பட்ட வீடியோ ஒன்றை அவர் தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். 


Advertisement

Advertisement