திரில்லர் என்றாலே ரசிகர்கள் அனைவருக்கும் புதிய திருப்பங்கள் மற்றும் பதட்டம் என்பன தான் நினைவுக்கு வரும். அந்த மாதிரித் தான், 'டெக்ஸ்டர்' படமும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இயக்குநர் சூரியன் ஜி எடுத்த இந்த முயற்சி, தமிழ் திரையுலகில் புதிய திருப்புமுனையாக அமைந்துள்ளது. கதாநாயகனாக ராஜீவ் கோவிந்த் மற்றும் யுக்தா பெர்வி நடித்துள்ள இப்படம் திகில் ரசனையைக் கொண்டதாக அமைந்துள்ளது.
'டெக்ஸ்டர்' என்பது சாதாரண மனிதனின் கதையல்ல, இது ஒரு அதிரடி வழக்கு விசாரணையை மையமாகக் கொண்ட கதை. நம்மைச் சுற்றி நடக்கும் குற்றங்கள், அதன் பின்னணி மற்றும் மனநிலை என்பற்றை இயக்குநர் ஒரு கதையில் கொண்டுவந்துள்ளார்.
இதனைப் பார்த்த ரசிகர்கள் ‘டெக்ஸ்டர்’ படத்தில் வரும் காட்சிகள் மற்றும் சத்தங்கள் அனைத்தும் சிறப்பாக இருந்ததாக கூறியுள்ளனர். மேலும் இது ஒரு சிந்தனையைத் தூண்டும் திரில்லர் படம் என்றும் கூறினார்கள். அத்துடன் கொலைக்குப் பின்னால் உள்ள மனநிலைகள் மற்றும் சமூகத்தின் இருண்ட பக்கங்கள் ஆகியவை சிறப்பாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் இப்படத்தை அனைவரும் திரையரங்குகளில் வந்து கட்டாயமாகப் பார்க்கவேண்டும் எனவும் கூறியுள்ளனர்.
Listen News!