• Apr 26 2024

சினிமட்டிக் யுனிவர்ஸ் என்ற பெயர் மக்கள் கொடுத்தது-நெகிழ்ச்சியாகக் கூறிய லோகேஷ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குறும்படங்களில் தொடங்கி வெள்ளித்திரையில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இவரது இயக்கத்தில் வெளியாகிய மாநகரம் கைதி மாஸ்டர் ஆகிய திரைப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.

இதனைத் தொடர்ந்து சமீபத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படமும் மெகா ஹிட் வெற்றி பெற்று வருவதோடு பான் இந்தியத் திரைப்படமாக அனைத்து மொழிகளிலும் வெற்றிகரமாக நல்ல வரவேற்புடன் வசூலை குவித்துள்ளது.

படம் வெளியாகி முதல் மூன்று நாட்களுக்குள் தமிழ்நாட்டில் 100 கோடி வசூலை தாண்டிய நிலையில் 5 நாட்களில் உலக அளவில் 250 கோடி வசூலை எட்டியுள்ளது.

இந்த படத்தில் லோகேஷ் கனகராஜ் முன்னதாக இயக்கிய கைதி திரைப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்களும் இடம்பெற்றிருந்தனர். இறுதி காட்சியில் சூர்யா தோன்றியது அடுத்த பாகத்திற்கான ஆரம்பம் என கூறப்பட்டுள்ளது.

பிரபல ஹாலிவுட் நிறுவனமான மார்வெல் படங்களில் இதுபோல ஒரு படத்தில் இன்னொரு கதாப்பாத்திரத்தின் தோற்றம் என ஒன்றோடு ஒன்று தொடர்பு படுத்தி அடுத்தடுத்த பாகமாக எடுப்பார்கள். இதை சினிமாட்டிக் யுனிவர்ஸ் என்று சொல்வார்கள்.

மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸ் போல தற்போது லோகேஷ் தமிழில் தனது சினிமட்டிக் யுனிவர்ஸை தொடங்கியுள்ளார். அதை வரவேற்கும் விதமாக மார்வெல் ஸ்டைலில் லேகேஷின் படக்காட்சிகளை வைத்து ரசிகர் ஒருவர் தயார் செய்துள்ள இண்ட்ரோ வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இதனால் தற்போது சமூக வலைதளங்கள் முழுவதும் Lokesh Cinematic Universe என்ற பெயர் ட்ரெண்டாகியுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள இயக்குநர் லோகேஷ் கனகராஜ் “Lokesh Cinematic Universe (LCU) என்ற பெயர் மக்கள் கொடுத்தது. இனி வரும் காலங்களில் கைதி, விக்ரம் படங்களில் தொடர்ச்சியாக வரும் படங்களில் LCU என்ற பெயர் இடம்பெறும்” என்று தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமண செலவு மட்டும் இத்தனை கோடியா…சொக்கிப்போன ரசிகர்கள்..!

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement