• Dec 09 2022

சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்திற்கு கிடைத்த முக்கிய சலுகை- செம குஷியில் படக்கழு

Listen News!
stella / 5 months ago
image
Listen News!

விஜய் டிவியில் தொகுப்பாளராக அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். காமெடி கலந்த நடிப்பில் ரசிகர்களைகவர்ந்த இவர் சென்டிமென்ட் காட்சிகளிலும் நடித்து மாஸ் காட்டி வருகின்றார்.

சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டான் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் வெற்றி அடைந்துள்ளது.தொடர்ந்து சிவகார்த்திகேயன் தனது 20வது படமான பிரின்ஸ் என்னும் படத்தில் கம்மிட் ஆகி நடித்து வருகின்றார்.இப்படத்தை தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கி வருகின்றார். தமன் இசையமைக்கும் இந்தப் படப்பிடிப்பு காரைக்குடி பாண்டிச்சேரி மற்றும் லண்டன் ஆகிய இடங்களில் நடந்தது.

இப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த நடிகை மரீனா நடிக்கின்றார். படத்தின் மீதி படப்பிடிப்பு லண்டனில் விரைவில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் படத்தின் ப்ரஸ்ட் லுக் மற்றும் தலைப்பில் நேற்று வெளியாகி உள்ளது, இதை அடுத்து இதன் இரண்டாவது போஸ்டரும் வெளியாகியுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் 20 வது படத்தின் ஆடியோ உரிமையை தெலுங்கின் முன்னணி நிறுவனமான ஆதித்யா மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மற்றும் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையையும் கோபுரம் பிலிம்ஸ் அன்புச்செழியன் பெற்றுள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்: