• Sep 21 2024

ப்பா…இது நம்ம குக்வித்கோமாளி புகழ் ஷிவாங்கியா இது…. நீங்களே பாருங்க

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய்டிவியில் ஒளிபரப்பாகிய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபல்யமானவர் தான் ஷிவாங்கி நாராயணன். இந்த நிகழ்ச்சியில் தனது குரலை விட தனது குறும்புத்தனத்தினாலேயே ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்தார். இதனைத் தொடர்ந்து சில நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்தார்.

இருப்பினும் குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாகப் பங்கு பற்றியதன் மூலமே ரசிகர்களிடம் நல்ல ரீச் கிடைத்தது. இந்த நிகழ்ச்சியில் 2 வது சீசனில் நடிகர் அஷ்வினுடன் சேர்ந்து இவர் செய்த சேட்டைகளும் ஏராளம் எனலாம்.

இந்த நிகழ்ச்சியில் பிரபல்யமானதை அடுத்து தற்பொழுது பல ஆல்பம் பாடல்களில் பாடி வருவதோடு பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார். அந்த வகையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் வெளியாகியிருந்த டான் படத்தில் நடித்திருந்தார்.

இப்படத்தை தொடர்ந்து வடிவேலுவுடன் நாய் சேகர் Returns படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஷிவாங்கி, அடிக்கடி புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பதிவு செய்வார்.

அந்த வகையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தன்னுடைய புதிய ஹேர் ஸ்டைல் வீடியோவை பதிவு செய்துள்ளார். அந்த ஸ்டோரியின் புகைப்படம்..

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement