• Jan 18 2025

நீலிக்கண்ணீர் வடித்து காரியத்தை சாதித்த தங்கமயில்.. கதிருக்காக முதல் முறை வருத்தப்படும் பாண்டியன்..!

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் இன்று தங்கமயில் சரவணனிடம் நீலிக்கண்ணீர் வடிக்கிறார். உங்களுக்கு என் மேல் அன்பு பாசமே இல்லை என்றும், உங்கள் தம்பி மீது தான் பாசம் என்றும், உங்கள் தம்பி பொண்டாட்டி என்னை திட்டினால் கூட அதை நீங்கள் கண்டு கொள்ள மாட்டீர்கள் என்றும் போலியாக அழுதபடி கூற, சரவணன் பதறியபடி நான் என்ன செய்தால் உன் மீது பாசம் இருக்கிறது என்று நம்புவாய் என்று கேட்கிறார்.

என்னை ஹனிமூன் கூட்டிட்டு போங்கள், அப்படி செய்தால் நம்புகிறேன் என்று சொல்கிறார். உடனே சரவணன் சரி கூட்டி போகிறேன் என்று சொல்ல, தங்கமயில் தான் காரியத்தை சாதித்து விட்டதாக நினைத்து மனதிற்குள் மகிழ்ச்சி அடைகிறார். இந்த நிலையில் தங்கமயிலை எப்படி ஹனிமூன் கூட்டிட்டு போவது என்று சரவணன் தனியாக புலம்பி கொண்டிருக்கும் நிலையில் செந்தில், கதிர் மற்றும் பழனி ஆகியோர் வந்து, என்ன என்று கேட்க, அதற்கு தங்கமயில் கூறியதை கூறுகிறார்.

தங்கமயில் கூறுவதும் சரிதானே, திருமணம் ஆனவர்கள் ஹனிமூன் செல்வது உலக வழக்கம் தானே, அது நம்ம வீட்டில் நடக்கவில்லை என்பதால் வாய் விட்டு கேட்டு விட்டார்கள்’ என்று கூற அப்பாவிடம் இதை எப்படி பேசுவது என்று யோசனையாக இருக்கிறது என்று சரவணன் புலம்புகிறார்.



இந்த நிலையில் பழனிவேலை அவரது அண்ணன் சக்திவேல் தனது வீட்டுக்குள் அழைத்து குமரவேல்  திருமண ஏற்பாடுகள் பற்றி கூற பழனியும் மகிழ்ச்சியடைந்து வாழ்த்துகிறார். அப்போது அவரது அம்மா பழனிக்கும் ஒரு பெண்ணை பாருங்கள் என்று கூற, அதற்கு இரு அண்ணன்களும் கண்டிஷன் போட, இதெல்லாம் நமக்கு சரிவராது என்று தப்பித்தேன் பிழைத்தேன் என்று அந்த வீட்டில் இருந்து பழனி வெளியே வருகிறார்.

இந்த நிலையில் பாண்டியன், கோமதி மற்றும் பழனி ஆகியோர் பேசி கொண்டிருக்கும் நிலையில் சைக்கிள் குறித்து கோமதி கேட்கிறார். அப்போது கதிர் இதுவரை அவருடைய நண்பனின் பைக்கை தான் ஓட்டிக் கொண்டிருந்தான், தற்போது அவன் பைக்கை திருப்பி கேட்டதால் அந்த பழைய சைக்கிளை ரிப்பேர் செய்து கதிர் தான் வேலைக்கு எடுத்து செல்கிறான் என்று கூற, கோமதி அதிர்ச்சி அடைய,  முதல் முறையாக கதிரை நினைத்து பாண்டியன் வருத்தப்படும் காட்சியுடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வருகிறது.

Advertisement

Advertisement