• Sep 08 2024

விஜய் கைவிட்ட படம்.. சூர்யா நடிப்பில் சூப்பர்ஹிட்.. இப்போ பார்ட் 2-ல் சந்தானம்?

Sivalingam / 1 month ago

Advertisement

Listen News!

விக்ரமன் இயக்கத்தில் உருவான 'உன்னை நினைத்து’ என்ற திரைப்படத்தில் முதலில் விஜய் நடிப்பதாக ஒப்புக்கொண்டு சில காட்சிகளும் படமாக்கப்பட்டது. ஆனால் திடீரென அந்த படத்தில் இருந்து விஜய் விலக, அவருக்கு பதிலாக சூர்யா அந்த படத்தில் இணைந்ததை அடுத்து அந்த படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த தகவல்கள் கசிந்து கொண்டிருக்கும் நிலையில் இது குறித்து இயக்குனர் விக்ரமன் வெளிப்படையாகவே தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

2002 ஆம் ஆண்டு சூர்யா, லைலா, சினேகா உள்பட பலர் நடிப்பில் சிற்பி இசையில் உருவான திரைப்படம் ’உன்னை நினைத்து’. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்று வசூலையும் வாரிக்குவித்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த தகவல்கள் கசிந்து கொண்டிருக்கின்றன.

ஆனால் சூர்யா, லைலா, சினேகா ஆகியோர் ‘உன்னை நினைத்து 2’ படத்தில் நடிக்க வாய்ப்பு இல்லை என்ற நிலையில் இந்த படத்தில் சந்தானம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. இது குறித்து விக்ரமன் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறிய போது ’உன்னை நினைத்து 2’ படம் எடுக்க யோசித்தது உண்மைதான், திரைக்கதையும் எழுத ஆரம்பித்தது உண்மைதான், ஆனால் பாதி வரைக்கும் தான் கதை வந்தது, அதனால் அந்த ஸ்கிரிப்டை அப்படியே கைவிட்டு விட்டேன், ‘உன்னை நினைத்து 2’ படம் எடுக்கும் ஐடியா இப்போதைக்கு இல்லை என்றும் தெரிவித்தார்.



மேலும் ’உன்னை நினைத்து 2’ படத்தை எடுக்க இதுவரை யாரும் என்னிடம் அணுகவில்லை என்றும் இப்போதைக்கு எந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க போவதில்லை என்றும் தெரிவித்தார்.எனவே ’உன்னை நினைத்து 2’ படத்தில் சந்தானம் நடிக்க இருப்பதாக  வெளிவந்து கொண்டிருக்கும் செய்தி அனைத்தும் வதந்தி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் ’சூரிய வம்சம் 2’ படம் எடுக்க தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரி தன்னிடம் சொன்னதாகவும் ஆனால் எனக்கு விருப்பமில்லை என்று கூறிவிட்டேன் என்றும் தெரிவித்தார்.  ஆனால் அதே நேரத்தில் ’வானத்தைப்போல 2’ படம் எடுக்க வேண்டும் என்று எனக்கு விருப்பம் இருந்தாலும் இப்போதைக்கு அந்த படத்தில் நடிப்பதற்கு ஏற்ற நட்சத்திரங்கள் இல்லை என்பதால் அதையும் நான் எடுக்க விரும்பவில்லை என்றும் இயக்குனர் விக்ரமன் தெரிவித்துள்ளார்

Advertisement

Advertisement