• Oct 13 2024

சென்னைக்கு போறேன்னு பொய் சொல்லிட்டு செஞ்சிக்கு போயிருக்கு தங்கமயில்.. வைரல் வீடியோ..!

Sivalingam / 2 months ago

Advertisement

Listen News!

’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் தங்கமயில் கேரக்டரில் நடிக்கும் சரண்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செஞ்சி கோட்டைக்கு சென்ற வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் ’சென்னைக்கு போறேன்னு பொய் சொல்லிட்டு செஞ்சி கோட்டைக்கு போயிருக்கு தங்கமயில்’ என கிண்டலுடன் கூடிய கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது.

’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’  சீரியலில் பாண்டியன் குடும்பத்தினர் ஒற்றுமையாக சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருந்த நிலையில் திடீரென மூத்த மருமகளாக தங்கமயில் வந்த பின்னர் தான் குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்பட்டு வருவதாக கதை சென்று கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் சரவணன் மற்றும் தங்கமயில் ஆகிய இருவரும் ஹனிமூனுக்காக சென்னை சென்றுள்ள நிலையில் அங்கு ரூம் வாடகை பிரச்சனை மிகப்பெரிய அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இன்று வெளியாகிய முன்னோட்ட வீடியோவில் பாண்டியனுக்கு தெரியாமல் அவருடைய மொபைல் போனில் இருந்து சரவணனுக்கு கதிர் பணம் அனுப்பும் காட்சி இருப்பதை பார்க்கும் போது கதிர் மேல் தான் அனைத்து பழியும் விழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சரண்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செஞ்சி கோட்டைக்கு சென்ற வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் அவர் ஆயிரம் படிகள் கொண்ட செஞ்சி கோட்டைக்கு வந்துள்ளதாகவும் இங்கு குடிக்க தண்ணீர் கூட இல்லை, ஆனால் இங்கு ஒரு குகையில் சுனை நீர் இருக்கிறது என்று சொல்லி அந்த சுனை நீரை குடித்து தித்திப்பாக இருக்கிறது என்று சொல்லி உள்ளார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் ’தங்கமயில் சென்னைக்கு போறேன்னு பொய் சொல்லிட்டு செஞ்சிக்கு போயிருக்கு டோய்’ என்றும், தங்கமயில் சென்னைக்கு தானே ஹனிமூன் போனீங்க, இங்கே என்ன பண்றீங்க என்றும் ’என்னம்மா உன்னுடைய நிலைமை இந்த மாதிரி ஆயிருச்சே’ என்றும் கமெண்ட்ஸ் எல்லாம் பதிவாகி வருகிறது.


Advertisement