• Jan 18 2025

அப்படி ஒன்று இல்லவே இல்லை.. ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்த மமிதா பாஜு..!

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

நடிகை மமிதா பாஜு தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்திலிருந்து திடீரென ரசிகர்களுக்கு எச்சரிக்கை எடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் வெளியான ’பிரேமலு’ என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் மிகப் பெரிய அளவில் பிரபலமான மமிதா பாஜு அடுத்தடுத்து தமிழ் மலையாள படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக விஜய் நடிக்க இருக்கும் கடைசி திரைப்படமான ’தளபதி 69’ படத்தில் அவர் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் குறிப்பாக விஜய்யின் மகளாக அவர் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் பிரபலமாக இருக்கும் மமிதா பாஜு திடீரென எக்ஸ் தளத்திலும் புதிய கணக்கு தொடங்கி விட்டதாக தகவல் வெளியானது. இதனை அடுத்து அவருடைய கணக்கில் ஏராளமான ஃபாலோயர்கள் குவிந்தனர்.

இந்த நிலையில் மமிதா பாஜு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார். தனக்கு எக்ஸ் தளத்தில் எந்தவிதமான அக்கவுண்டும் இல்லை என்றும் தனது பெயரில் போலி கணக்குகள் ஆரம்பித்து சிலர் பதிவுகளை செய்து வருகின்றனர் என்றும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதனை அடுத்து எக்ஸ் தளத்தில் மமிதா பெயரில் உள்ள அக்கவுண்டுகள் எல்லாமே போலி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement