தமிழ் சினிமாவில் அட்டகத்தி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் பா.ரஞ்சித். அதன்பின்பு கார்த்தியை வைத்து மெட்ராஸ் படத்தை இயற்றினார். அந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக மாறியது.
இதைத்தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து கபாலி திரைப்படத்தை இயற்றினார். கபாலி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து காலா படத்தை இயக்கும் வாய்ப்பும் பா ரஞ்சித்துக்கு கிடைத்தது. அந்தப் படத்தை தொடர்ந்து சார்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கின்றது போன்ற படங்களையும் இயக்கினார்.
தற்போது சியான் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன் மற்றும் பசுபதி நடிப்பில் தங்கலான் திரைப்படத்தை பா.ரஞ்சித் இயக்கியுள்ளதோடு இந்த திரைப்படம் நாளை சுதந்திர தினத்தை முன்னிட்டு ரிலீஸ் ஆக உள்ளது.
சமீபத்தில் மாரி செல்வராஜ் உடன் இணைந்து அளித்த பேட்டி ஒன்றில், பா. ரஞ்சித் பேப்பர் கப்பும் நவீன தீண்டாமை தான் என பேசி உள்ளார். இல் சாதிய பாகுபாடு இருப்பதை பரியேறும் பெருமாள் படத்தில் கிளைமேக்ஸ் இல் காட்டி மாரி செல்வராஜை வைத்து அந்தப் படத்தை கவனிக்க வைத்தார் .
இந்த நிலையில், பா. ரஞ்சித் பேப்பர் தொடர்பாக பேசிய கப்பும் தீண்டாமையின் வெளிப்பாடு தான் என்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதனை ப்ளூ சட்டை மாறன் பங்கமாக கலாய்த்து உள்ளார்.
அதன்படி, நீங்கள் டீ, காபி சாப்பிடும் கடைகளில் உங்கள் விருப்பப்படி கண்ணாடி டம்ப்ளர் அல்லது பேப்பர் கப்பில் தருகின்றார்களா? அல்லது ஜாதி பார்த்து தருகின்றார்களா என்ற கேள்வியை கேட்டு கலாய்த்துள்ளார். மேலும் யாரும் ஜாதி பார்த்து பேப்பர் கப் தரவில்லை என்றும் பா ரஞ்சித்துக்கு எப்போதும் அதே நினைப்புதான் என்றும் தற்போது கமெண்ட் பண்ணி வருகின்றார்கள்.
Listen News!