சினிமாவில் மிகப்பெரிய சாதனை என்றால் ஆஸ்கர் விருதுகள் கிடைப்பது தான். இந்த விருதுகளை இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் உள்ளிட்டவர்கள் பெற்றுள்ளனர்.
96வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா மார்ச் மாதம் 10ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ள நிலையில், ஆஸ்கர் பரிந்துரை பட்டியல் வெளியாகியுள்ளது.
கோல்டன் குளோம் விருதுகளில் அதிக விருதுகளை பெற்ற ஓபன்ஹெய்மர் மற்றும் பார்பி உள்ளிட்ட படங்களே இந்த ஆஸ்கர் விருது பரிந்துரை பட்டியலிலும் அதிகமான இடங்களை பிடித்துள்ளன.
ஓபன்ஹெய்மர் படம் சிறந்த திரைப்படம் சிறந்த நாயகன், சிறந்த நடிகை, சிறந்த துணை கதாபாத்திரம் உள்ளிட்ட 13 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த முறை இந்திய படங்கள் இறுதிக்கட்டத்திற்கு தேர்வாகாதது ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இதனிடையே இந்த ஆண்டில் சிறந்த படம் கேட்டகரியில் 3 பெண் இயக்குநர்களின் படங்கள் இடம்பெற்றுள்ளது சிறப்பாக பார்க்கப்படுகிறது.
இந்த பரிந்துரை பட்டியலில் ஓபன்ஹெய்மர் 13 விருதுகளுக்கும் புவர் திங்ஸ் படம் 11 விருதுகளுக்கும் கில்லர்ஸ் ஆஃப் தி ப்ளவர் மூன் படம் 10 விருதுகளுக்கும் பார்பி 8 விருதுகளுக்கும் மேஸ்ட்ரோ 7 விருதுகளுக்கும் தேர்வாகியுள்ளன.
இந்திய வம்சாவளியை சேர்ந்த இயக்குநர் நிஷா பஹுஜாவின் To kill a Tiger என்ற ஆவணப்படம் சிறந்த ஆவணப்பட பிரிவில் இடம்பெற்றுள்ளது.
And the nominees for Best Picture are... #Oscars pic.twitter.com/UFNHnQBZsE
Listen News!