தமிழ் சினிமாவில் நடிகராகவும், இசையமைப்பாளராகவும் இரட்டை அடையாளத்துடன் வெற்றிகரமாக பயணித்து வருபவர் ஜி.வி.பிரகாஷ் குமார். சமீப காலமாக தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களை தேர்வு செய்து நடித்து வரும் அவர், தற்போது நடித்துள்ள புதிய படம் ‘லக்கி தி சூப்பர் ஸ்டார்’. இந்த படம் நேரடியாக OTT தளத்தில் வெளியாகவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘லக்கி தி சூப்பர் ஸ்டார்’ திரைப்படம், வருகிற 20-ஆம் தேதி முதல் ஜியோ ஹாட்ஸ்டார் (Jio Hotstar) தளத்தில் வெளியாக உள்ளது. இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய பல மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகிறது. இதனால், இந்த படம் இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்களை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திரையரங்குகளில் வெளியாகாமல், நேரடியாக OTT-யில் ரிலீஸ் ஆகும் இந்த முயற்சி, ஜி.வி.பிரகாஷ் ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலமாக பல நட்சத்திர நடிகர்களின் படங்கள் OTT-யில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், ‘லக்கி தி சூப்பர் ஸ்டார்’ அந்த வரிசையில் முக்கிய இடம் பிடிக்கும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில், ‘லக்கி தி சூப்பர் ஸ்டார்’ படத்தின் டிரெய்லர் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. இந்த டிரெய்லர், வெளியான சில மணி நேரங்களிலேயே யூடியூபில் வைரலாகி வருகிறது. அத்துடன், மில்லியன் கணக்கான பார்வையாளர்கள் இதனை பார்வையிட்டு தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
Listen News!