நடிகர் கமலஹாசன் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகர் நாகேஷ் அவர்களை நினைவு கூர்ந்து டுவிட்ட பதிவிட்டுள்ளார்.
திரையுலகில் காலடி எடுத்து வைக்கும் வரை திருப்பூர் ரயில் நிலையத்தில் எழுத்தாளராக பணிபுரிந்து வந்த நாகேஷ். சிறுவயது முதல் நடிப்பில் ஆர்வம் கொண்ட நாகேஷ் அமெச்சூர் நாடகங்களில் நடித்து வந்துள்ளார்.
1959ஆம் ஆண்டு திரையுலகில் காலடி எடுத்துவைத்த இவர் தாமரைக்குளம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிக்க துவங்கினார். அதன்பின் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவருக்கு கே. பாலச்சந்தரின் சர்வர் சூத்ரம் திரைப்படம் மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது.
இதன்பின் நீர்க்குமிழி, காதலிக்க நேரமில்லை, எதிர்நீச்சல் என ஒவ்வொரு படத்திலும் தனது முத்திரையை பதித்தார். திருவிளையாடலில் தருமி கதாபாத்திரம், தில்லானா மோகனாம்பாள் படத்தில் வைத்தி என்ற கதாபாத்திரம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
மேலும் எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் என பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்திலும் நடித்து அசத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. எம்.ஜி.ஆர், சிவாஜி மட்டுமின்றி ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜய், அஜித், மாதவன் என பல தலைமுறை நாயகர்களுடன் இணைந்து நடித்துவிட்டார்.
200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நாகேஷ், கமலின் நடிப்பில் கடந்த 2008ஆம் ஆண்டு வெளிவந்த தசாவதாரம் திரைப்படத்தில் கடைசியாக தோன்றினார். இந்நிலையில் தற்போது நடிகர் கமலஹாசன் "நகைச்சுவை நடிப்பில் தனித்துவம் மிக்க மேதையாகத் திகழ்ந்த நாகேஷ் அவர்களின் நினைவு நாள் இன்று. அவரது பெயரை நான் உச்சரிக்காத நாளென ஒன்று இருந்ததில்லை. கதாபாத்திரத்தின் அகமும் புறமும் அறிந்து, ஆழமும் அகலமுமாக வெள்ளித் திரையில் நிலைநிறுத்திக் காட்டுகிற ஆற்றலால் என்னை ஆட்கொண்ட ஆசிரியர் அவர். காலத்தால் அழியாத கலைஞனின் நினைவுகளைப் போற்றுகிறேன். என டுவிட் பதிவிட்டுள்ளார்.
Listen News!