• May 19 2024

‘ஆர்.ஆர்.ஆர்’படத்தை பார்க்க ரூபாய் 200 கட்டத் தேவையில்லை இலவசமாகவே பார்க்கலாம்- பிரபல ஓடிடி தளம் அறிவிப்பு

stella / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் பிரமாண்ட இயக்குநர்களில் முக்கியமானவர் தான் ராஜமௌலி. பாகுபலி படத்தை தொடர்ந்து இவரது இயக்கத்தில் தமிழ் தெலுங்கு ஹிந்தி மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிய திரைப்படம் தான் RRR.

இந்தப் படத்தில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களான ராம் சரண் மற்றும் ஜுனியர் என்.டி.ஆர் ஒன்றாக இணைந்து நடித்துள்ளனர். இவர்களுடன் ஆலியாபட் சமுத்திரக்கனி ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி ஆயிரத்து 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை செய்தது .இந்த நிலையில் இந்த படம் நெட்பிளிக்ஸ் மற்றும் ஜீ5 ஓடிடியில் வெளியாகும் என்றும் இந்த படத்தை பார்ப்பதற்கு ரூபாய் 200 தனியாக கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவித்து இருந்தது.

ஆனால் தற்போது திடீரென அதில் மாற்றம் செய்துள்ளது. ஜீ5 ஓடிடியில் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தை இலவசமாகவே பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. திடீரென இந்த மாற்றம் ஏன் என்பது புரியாமல் திரையுலகினர் குழப்பத்தில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/y2PXJAR7FsI


பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement