• May 08 2024

'எங்களுடன் இல்லாமல் அழ வைத்து விட்டீர்கள்'- மறைந்த நடிகர் வடிவேல் பாலாஜி குறித்து பதிவு போட்ட புகழ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடி முடிந்த நிகழ்ச்சிகளில் ஒன்று தான் கலக்கப் போவது யாரு. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபல்யமானவர் தான் நடிகர் வடிவேல் பாலாஜி.

இது தவிர பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் காலமானார். மிக இளம் வயதில் அவர் மறைந்தது அவரது ரசிகர்களுக்கும் சக நகைச்சுவைக் கலைஞர்களுக்கும் பெரும் அதிர்ச்சியாக அமைந்தது.

இந்நிலையில் வடிவேலு பாலாஜியோடு பல நிகழ்ச்சிகளில் இணைந்து பணியாற்றிய புகழ் இன்று வடிவேல் பாலாஜியின் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார். அதில் “மண்ணில் இருந்து மறைந்தாலும் என் மனதில் இருந்து நீங்கள் மறையவில்லை மாமா.

வாய்ப்பு தேடி வரும் அனைவருக்கும் வழிகாட்டியாக இருந்தீர்கள். உங்களுடன் இருந்த ஒவ்வொரு நாளும் என் வாழ்நாளில் மறக்க முடியாத நாட்கள். பலவற்றை எனக்கு கற்று கொடுத்தீர்கள். மற்றவர்களை எப்போதும் சிரிக்க வைப்பதே கடமை என வாழ்ந்த நீங்கள், இப்போது எங்களுடன் இல்லாமல் அழ வைத்து விட்டீர்கள். நினைவில் இருந்து என்றும் நீங்காது உங்கள் முகம். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மாமா” என நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/y2PXJAR7FsI


பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement