• May 09 2024

ஆதி-நிக்கி கல்ராணியின் திருமணம்-வெளியாகிய புகைப்படங்கள்.!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மிருகம், அய்யனார், அரவாண் போன்ற பல்வேறு ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபல்யமானவர் தான் ஆதி. இவருக்கு சமீபகாலமாக தமிழில் நல்ல படவாய்ப்புக் கிடைக்காததால் தெலுங்கு சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றார்.

அந்த வகையில் தற்போது லிங்குசாமி இயக்கத்தில் தயாராகி வரும் வாரியர் படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் ஆதி. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இவர் நடிகை நிக்கி கல்ராணியை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தார்.

தமிழில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான டார்லிங் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நிக்கி கல்ராணி, இதையடுத்து கலகலப்பு 2, ஹரஹர மகாதேவகி, உள்பட பல படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக நடிகர் ஆதியுடனுன் மரகத நாணயம் மற்றும் யாகாவராயினும் நாகாக்க ஆகிய படங்களில் நடித்தபோது தான் அவர் மீது காதல் வயப்பட்டுள்ளார்.

இவர்களுக்கு அண்மையில் திருமணம் நிச்சயமானது. இதில் நெருங்கிய உறவினர் மாத்திரமே கலந்து கொண்டனர். அவர்கள் இருவரும் ஜோடியாக எடுத்த புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகின.

இந்நிலையில் நேற்று அவர்களின் மெஹந்தி நிகழ்ச்சி புகைப்படங்கள் வெளியாகின, அதில் பிரபலங்கள் அஜித்தின் பாடலுக்கு நடனம் ஆடிய வீடியோ வெளியாகி இருந்தது.

இந்த நிலையில் ஆதி-நிக்கி கல்ராணியின் திருமண புகைப்படங்கள் வெளியாகியுள்ளது, இதோ பாருங்கள்,

Advertisement

Advertisement

Advertisement