கன்னடத்தில் முன்னணி நடிகையாக இருப்பவர் ருக்மணி வசந்த். இவர் சப்த சாகரதாச்சே எல்லோ படத்தின் மூலம் பிரபலமடைந்தவர். இவர் தற்போது பஹ்ரா படத்தை தொடர்ந்து, சிவராஜ்குமாருடன் 'பைரதி ரணகல்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இவருக்கென பல ரசிகர்கள் இருக்கிறார்கள்.

இவர் தற்போது தமிழ் சினிமாவில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கும் 'ஏஸ்' என் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அத்தோடு சிவகார்த்திகேயன் - ஏ.ஆர் முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் புதிய படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது நடிகை ருக்மணி வசந்த் தெலுங்கில் பிரபல நடிகரான ஜூனியர் என்டிஆருடன் இணைந்து ஒரு பிரமாண்டமான படத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த படம் ஜூனியர் என்டிஆர் மற்றும் பிரசாந்த் கூட்டணியில் உருவாகும் புதிய படம் என தகவல் வெளியாகி இருக்கிறது. இது தொடர்பான அப்டேட் இனி வரும் காலங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

Listen News!