தமிழ் சினிமாவின் மாஸ் மற்றும் ஹாரர் கலந்த கதாப்பாத்திரங்களில் தனக்கென ஒரு தனி அடையாளம் வைத்திருப்பவர் நடிகர் ராகவா லாரன்ஸ். இவரது நடிப்புத் திறமை மற்றும் நடனம் என்பன மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இந்நிலையில், லாரன்ஸ் தற்போது ஒரு புதிய படத்தில் களமிறங்கியுள்ளார். அந்த படம் தான் ‘பென்ஸ்’.
இப்படத்தை லோகேஷ் கனகராஜ் தயாரிக்கின்றார். தமிழ் சினிமாவில் தற்போது டிரெண்டிங் இயக்குநராக உருவாகியுள்ள இவர் பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார். அந்தவகையில் தற்பொழுது உருவாக்கியிருக்கும் ‘பென்ஸ்’ திரைப்படத்தின் சிறப்பு என்னவென்றால், இது லோகேஷ் கனகராஜ் (LCU) சினிமாடிக் யூனிவர்ஸுடன் இணையும் புதிய பாகமாகும். இதன் மூலமாக, லாரன்ஸ் LCU நிறுவனத்திற்குள் நுழைகிறார் என்பது ரசிகர்களிடம் பெரும் ஆவலை ஏற்படுத்தியுள்ளது.
‘ரெமோ’ படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இப்படத்தை இயக்குகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் தயாரிப்பு பணிகளை லோகேஷ் கனகராஜ் தனது நிறுவனமான ‘ஜி ஸ்குவாட்’ வாயிலாக மேற்கொள்கிறார். இது அவருடைய தயாரிப்பு நிறுவனத்திலிருந்து வெளியாகும் முதல் மெகா LCU extension படமாக இருக்கும் என்ற தகவலும் தற்பொழுது கிடைத்துள்ளது. அந்தவகையில் படக்குழுவினர் இன்று சிறப்பான பூஜையுடன் 'பென்ஸ்' படப்பிடிப்பை தொடங்கியுள்ளனர்.
Listen News!