பொங்கல் தினத்தை முன்னிட்டு சிவகார்த்திகேயன் அயலான், தனுஷின் கேப்டன் மில்லர், அருண் விஜயின் மிஷன் சாப்டர் 1 மற்றும் விஜய் சேதுபதி மெர்ரி கிறிஸ்மஸ் ஆகிய நான்கு திரைப்படங்கள் வெளியாகி, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.
இதில் அயலான் மற்றும் கேப்டன் மில்லர் ஆகிய இரண்டு திரைப்படங்களும் அதிக அளவில் தியேட்டர்களில் ரிலீசானது. இந்த இரண்டு படங்களும் வசூலிலும் வேட்டையாடி வருகின்றது.
அதுபோல மிஷன் சாப்டர் 1 திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகின்றது.
இவ்வாறு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் குறைந்தது இரண்டு திரைப்படங்கள், அதிகப்படியாக ஐந்து திரைப்படங்கள் வரை ரிலீஸ் ஆகி வருகின்றதை அவதானித்து வருகின்றோம்.
எனினும், பொங்கல் விருந்தாக நான்கு பிரபல நடிகர்களின் திரைப்படங்கள் வெளியான நிலையில், நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை ஒரு புதிய படம் கூட வெளியாகவில்லை என்பது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.
எனினும், புதிய திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராக இருந்தும், தியேட்டர்கள் சரியான அளவில் கிடைக்காததால் வெள்ளிக்கிழமையான நேற்றைய தினம் ஒரு தமிழ் படம் கூட வெளியாகவில்லை.
கடந்த ஒரு சில வருடங்களாகவே ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் புதிய திரைப்படங்கள் ரிலீஸுக்கு வந்த நிலையில், நேற்றைய தினம் மாத்திரம் ஒரு படம் கூட ரிலீசாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!