• Jun 28 2025

நாகார்ஜுனாவின் மகன் அகில் அக்கினேனிக்கு இன்று திருமணம்...!மணப்பெண் யார் தெரியுமா?

Roshika / 3 weeks ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவர் நாகார்ஜுனா. இவர் பல திரைப்படங்களில் நடித்து ரசிர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். இந்த நிலையில் இவருக்கு "நாக சைதன்யா மற்றும் அகில் அக்கினேனி "என இரண்டு மகன்கள் இருக்கின்றார்கள். இவருடைய இரண்டாவது மகனான அகில் அக்கினேனி  இன்றைய தினம் திருமணம் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 


சமீபத்தில் நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபலா இருவருக்கும் திருமணம் நடைபெற்ற குறிப்பிடத்தக்கது. இதனைத்தொடர்ந்து  நாகார்ஜுனாவின் இளைய மகனான அகில் அக்கினேனி கடந்த வருடம் திருமண நிச்சயம் நடைபெற்று அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டிருந்தனர்.


இந்த நிலையில் இன்று அவர்களது அகில் அக்கினேனி மற்றும் ஜைனப் ரவ்ட்ஜி இருவருக்கும் திருமணம் நடைபெற்றிருக்கிறது. ஹைதராபாத்தில் உள்ள நாகார்ஜுனாவில் வீட்டில் எளிமையான  முறையில்  திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமண விழாவில் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்.  

மேலும் வரும் ஜூன் 8 ஆம் ஹைதராபாத்தில் உள்ள நாகார்ஜுனாவிற்கு  சொந்தமான அன்னபூர்ணா ஸ்டுடியோஸில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.மேலும்  தகவல் அறிந்த ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.


Advertisement

Advertisement