• Jan 19 2025

தினமும் உன்னை அதிகமாக இழந்து வாடுகிறேன்! தவறிவிழுந்து உயிரிழந்த தன் மகளுக்கு உருக்கமான பதிவு! பாடகி சித்ராவுக்கு பலரும் ஆறுதல்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா ரசிகர்களால் ரசிக்கப்படும் ஒரு குரல். சின்னகுயில் சித்ரா எப்படிபட்ட பாடல்களை கொடுத்தாலும் அதை அழகாக பாடி ரசிகர்களை மீண்டும் மீண்டும் ரசிக்க வைப்பார். இவர் தமிழில் மட்டுமல்ல மலையாளத்திலும் பல பாடல்களைப் பாடி இருக்கின்றார்.

கடைசியாக விஜய் நடிப்பில் வெளிவந்த வாரிசு படத்தில் இடம்பெற்ற அம்மா பாடலை பாடி அனைவரையும் அசத்தி இருந்தார். சித்ரா அவர்கள் பாடல்கள் பாடுவதை தாண்டி நிறைய இசை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார்.

இந்த நிலையில், பாடகி சித்ரா மறைந்த தன் மகளின் பிறந்தநாளில் உருக்கமான பதிவு ஒன்றை போட்டுள்ளார். 


1988ஆம் ஆண்டு விஜயசங்கர் என்பவரை திருமணம் செய்தார் பாடகி சித்ரா. இந்த தம்பதிகளுக்கு பல ஆண்டுகள் கழித்து, 2002-ம் ஆண்டு நந்தனா என்ற பெண் குழந்தை பிறந்தது. 

குறித்த குழந்தை ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட போதும், சித்ரா எந்தவொரு நிகழ்ச்சிக்குச் சென்றாலும் கூடவே அழைத்துச் செல்வார். 

இவ்வாறான நிலையில், கடந்த 2011ம் ஆண்டு ஏ ஆர் ரஹமான் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க பாடகி சித்ரா டுபாய் சென்ற போது, அவரது குழந்தை  நீச்சல் குளமொன்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளது.


தற்போது, இவ்வாறு உயிரிழந்த தனது மகளை நினைத்து உருக்கமான பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில், 

'நீ என் இதயத்தை துளைத்து விட்டு சென்றுள்ளாய். அதை என்னால் என்றும் நிரப்பவே முடியாது. நீ என்னை விட்டு போன பின் ஒவ்வொரு நாளும் நான் உன்னை அதிகமாக இழந்து வாடுகிறேன். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நந்தனா' என்று குறிப்பிட்டுள்ளார்.

சித்ராவின் இந்த பதிவு பலரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. பலர் சித்ராவுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.


Advertisement

Advertisement