• Jan 15 2025

அம்மனுக்கு பால்குடம் எடுத்த மியா கலிஃபா.. சர்ச்சையை கிளப்பிய பேனர்

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

லெபனான் நாட்டில் பிறந்த மியா கலிஃபா அமெரிக்காவில் வசித்து வருகின்றார். இவர் ஆபாச படம்  நடித்து மிகவும் பிரபலமானார். இவருக்கு பல எதிர்ப்புகளும் மிரட்டல்களும் விடுக்கப்பட்டது. தற்போது ஆபாச படங்களில் நடிக்காமல் வேறு தொழில்களை தொடங்கி நடத்தி வருகின்றார்.

இந்த நிலையில், அம்மனுக்கு பால்குடம் எடுப்பது போல நடிகை மியா கலிஃபாவின் புகைப்படத்தை அச்சிட்டு பேனர் அடித்துள்ளார்கள். இந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகள் அம்மன் வழிபாட்டிற்கு உகந்ததாக கருதி அந்த நாளில் கோவில்களில் விளக்கு பூஜை என்ற கூட்டு வழிபாட்டினை பெண்கள் மேற்கொண்டு வருவார்கள்.


காஞ்சிபுரம் அடுத்த குருவிமலை பகுதியில் ஆடி வெள்ளியை முன்னிட்டு ஸ்ரீ மாப்பிள்ளை விநாயகர் ஆலயத்தில் அம்மனுக்கு வளைகாப்பு வைபவம் நாளைய தினம் நடைபெற உள்ளது.

இந்த விழாவிற்காக அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் பேனர் அடித்துள்ளார்கள். அந்த பேனரின் மியா கலிஃபா பால்குடம் எடுப்பது போன்ற புகைப்படத்தையும் இளைஞர்கள் அச்சத்துள்ளார்கள்.

மேலும் அந்த பேனரில் தங்களுடைய ஆதார் கார்டு வடிவில் தங்களது பெயர், வயது உள்ளிட்ட விபரங்களையும் இளைஞர்கள் அச்சடித்து உள்ளார்கள். அதில் சில இளைஞர்களுக்கு 18 வயது கூட பூர்த்தியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement