• Jan 15 2025

முத்துவுக்காக மனோஜ் போட்ட மாஸ்டர் பிளான்.. முட்டிமோதும் விஜயாவின் மருமகள்கள்

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், சிறந்த ஜோடிக்கான போட்டியில் பங்கு பற்றுவதற்கு மூன்று ஜோடியும் தயாராக காணப்படுகின்றது. ஆனாலும் ரோகிணி இதில் பங்கு பற்ற வேண்டுமா? டைம் வேஸ்ட் என மனோஜிடம் சொல்ல, அவர் இதில் ஒரு லட்சம் கொடுக்குறாங்க அந்த காசு கிடைச்சா முத்துக்கு ரெண்டு மாச காசு கொடுத்து விடலாம். கண்டிப்பா நாங்க தான் ஜெயிப்போம் கலந்து கொள்ளலாம் என சொல்லுகிறார்.

அதன் பின்பு மீனா முத்துவுக்கு பால் கொடுத்துவிட்டு competition பற்றி யோசிக்குமாறு சொல்ல, அவர் என்ன கேள்வி கேட்பாங்க டான்ஸ் ஆட சொல்லுவாங்களோ என்று மண்டை குழம்பி காணப்படுகின்றார்.

இதை தொடர்ந்து ரவியிடம் கேட்போம் என இருவரும் செல்ல, அவர்கள் ரூமில் இல்லை. மேலே மொட்டை மாடியில் சென்று பார்க்கும் போது ரவியும் ஸ்ருதியும் சண்டை போட்டுக் கொண்டுள்ளார்கள். உடனே முத்து ஓடிப் போய் தடுத்து ரவிக்கு பேச, தாம் இருவரும் பிராக்டிஸ் பண்ணுவதாக சொல்லுகின்றார்கள்.


இதன் போது மீனா என்ன மாதிரி கேள்வி கேட்பார்கள் என்று ஸ்ருதியை கேட்க, அவர் உங்களைப் பற்றிய விபரங்கள் தான் கேட்பாங்க ஒரு நாள் நைட் இருக்கு தானே இரண்டு பேரும் பேசி பிரக்டிஸ் பண்ணுங்க என சொல்லுகின்றார்.

அடுத்த நாள் குறித்த போட்டியில் ஆறு ஜோடி பங்கு பற்றுகின்றது. அதில் ஏனையவர்கள் எல்லோரும் இன்ஜினியர், பிஸ்னஸ் மேன் பெரிய பெரிய தொழில்களில் இருக்க, அதில் முத்துவும் மீனாவும்  தான் கார் டிரைவர் பூ கட்டுவதாக சொல்லுகின்றார்கள். இதனால்  ஏனையவர்களுக்கு கிடைத்த கைதட்டல் இவர்களுக்கு யாரும் கைகள் தட்டவில்லை.

இறுதியாக அதில் பங்கு கொண்ட பெண்களை தனியாக அழைத்து அவர்களுடைய டலண்டை கேட்கின்றார்கள். அதன்படி ரோகிணி ஆண் ஒருவரை பெண்ணாக மேக்கப் பண்ணுகிறார், ஸ்ருதி  டப்பிங் பேசுவதற்காக மேடையில் வந்திருக்கிறார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement