• Sep 19 2024

பச்சை நிற வேட்டி கட்டி காலில் மிஞ்சி போட்டு புகைப்படம் வெளியிட்ட மாளவிகா மோகனன்- அட இது என்ன வித்தியாசமா இருக்கே

stella / 2 years ago

Advertisement

Listen News!

மலையாள சினிமாவில் கடந்த 2013ம் ஆண்டு வெளியான பட்டம் போல என்னும் திரைப்படத்திகன் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் மாளவிகா மோகன். இப்படத்தைத் தொடர்ந்து சில காலம் மலையாள சினிமாவில் தான் படங்களில் நடித்து வந்தார்.

தொடர்ந்து தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகினார். அப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து அசத்தியிருந்தார். பின்னர் விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஹீரோயினாக நடித்தார். அதேபோல தனுஷுடன் மாறன் என்னும் படத்தில் நடித்திருந்தார்.

மேலும் தமிழைத் தவிர , மலையாளம்,ஆங்கிலம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்து வருகின்றார். சில மாதங்களுக்கு முன்பு இத்தாலி & மாலைதீவு போன்ற நாடுகளுக்கு சுற்றுலா சென்ற மாளவிகா மோகனன், தனது லேட்டஸ்டான புகைப்படங்களையும் பதிவிட்டு வருவார்.

புகைப்படக் கலையில் தேர்ச்சி பெற்ற இவர் பச்சை நிற வேட்டி கட்டி செல்ஃபி புகைப்படத்தை எடுத்து வெளியிட்டுள்ளார். காலுக்கு மிஞ்சியும் போட்டுள்ளார். இந்தப் புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் திருமணம் முடிந்து விட்டதா எனக் கேட்டு வருவதையும் காணலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement