• May 19 2024

குடும்பத்துடன் வந்த தீபிகாவுக்கு 'ஐ லவ் யூ' சொன்ன நபர்- அட இவர் கொடுத்த பதிலடி நல்லா இருக்கே

stella / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவூட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் தீபிகா படுகோன். இவர் கன்னட சினிமாவில் வெளியாகிய ஐஸ்வர்யா என்னும் படத்தின் மூலம் அறிமுகமாகினார். இப்படத்தின் மூலம் தனக்கென ஓர் ரசிகர் பட்டாளத்தை சேர்த்த இவர் 2007ம் ஆண்டு பாலிவூட் சினிமாவில் அறிமுகமாகினார்.

அந்த வகையில் ஷாருக்கான் நடித்த ஓம் சாந்தி ஓம் படத்தில் பிரபலமடைந்தார். பின்னர், சஞ்சய் லீலா பன்சாலியின் பாஜிராவ் மஸ்தானி, பத்மாவத் மற்றும் கோலியோன் கி ராஸ்லீலா ராம்-லீலா மற்றும் மறைந்த இர்ஃபான் கான் மற்றும் அமிதாப் பச்சனுடன் பிகு, ரன்பீர் கபூருடன் YJHD, தமாஸா ஆகிய படங்களின் மூலம் உச்ச நடிகையாக மாறியுள்ளார்.

மேலும் பிரபல நடிகரான ரண்வீரை திருமணம் செய்திருக்கும் இவர் ஹிருத்திக் ரோஷனுடன் ஃபைட்டர் படத்திலும் ஷாருக்கான் மற்றும் ஜான் ஆபிரகாம் நடிப்பில் பதான் படத்திலும் நடித்து வருகின்றார். பதான் படம் ஜனவரி 2023 இல் ரிலீசாக உள்ளது.

இது தவிர சமீபத்தில், ​​தீபிகா படுகோனே கார்டியர் நிறுவனத்தின் விளம்பர தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சியில் தீபிகா படுகோனே தனது குடும்பத்துடன் கலந்து கொண்டார். அப்போது கூட்டத்தில் இருந்து ரசிகர்களில் ஒருவர் 'ஐ லவ் யூ' என தீபிகா படுகோனை நோக்கி கத்தினார்.

https://twitter.com/elitestanning/status/1543671928312844288

அதற்கு தீபிகா படுகோனே, நான் திருமணமான பெண்" என நகைச்சுவையாக பதில் அளித்துள்ளார். இந்த வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று பலரால் பகிரப்பட்டு வருவதையும் காணலாம்..

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement