தமிழ் திரையிசை கவிஞர்களில் திரைத்துறை தாண்டி இலக்கியபரப்பில் இயங்கிக்கொண்டிருக்கும் மூத்த கவிஞர் தான் வைரமுத்து.கவிஞ்சர் எழுத்தாளர் என இலக்கிய இயங்குவெளியில் முன்னிடம் பிடிக்கும் வைரமுத்துவின் திரையிசை பாடல்களில் கூட நாம் இலக்கிய சுவையை காணக்கூடியதாய் உள்ளது.
இளையராஜாவின் இசையில் 'பொன்மாலைப் பொழுது' பாடலை எழுதி தமிழ் திரையுலகில் காலடி வைத்த கவிஞர் இதுவரை 6000 திரையிசை பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார்.இவரது கவித்திறனை பெருமை படுத்தும் விதமாக இவருக்கு கவிப்பேரரசு பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
அண்மையில் கவிப்பேரரசு வைரமுத்துவிற்கு மதுரைத் தமிழ் இசைச் சங்கம் 'முத்தமிழ்ப் பெருங்கவிஞர்' என்ற பட்டத்தை வழங்கி கவுரவித்துள்ளது.இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் நன்றி தெரிவித்திருக்கும் கவிஞர் மேலும் "இந்த விருதுக்கு என்னைத் தகுதிப்படுத்திக் கொள்வேன்" எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பொன்விழாக் காணும்
மதுரைத் தமிழ் இசைச் சங்கம்
'முத்தமிழ்ப் பெருங்கவிஞர்'
என்ற பட்டத்தை எனக்கு வழங்கியது
அமைச்சர் தங்கம் தென்னரசு
பட்டயமும் பொற்கிழியும் வழங்கினார்
தமிழ் இசைச் சங்கத் தலைவர்
ஏ.சி.முத்தையா,
திருமதி தேவகி முத்தையா,
பொற்கிழி பெற்ற விசாகா ஹரி,
மற்றும் அறங்காவலர்கள்… pic.twitter.com/Clpk1Rly31
Listen News!