நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படம் ஜூன் 14ஆம் தேதி வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
இந்த படத்தில் விஜய் சேதுபதி உடன் அனுராக் காஷ்யப், நட்டி நட்ராஜ், மம்தா மோகனதாஸ், சிங்கம் புலி, திவ்யபாரதி, அபிராமி அருள்தாஸ், முனிஸ்காந்த் என பலரும் நடித்திருந்தார்கள்
மகாராஜா திரைப்படம் இதுவரையில் கிட்டத்தட்ட 85 கோடி வரை வசூலித்து சாதனை படைத்துள்ளது. விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் படங்கள் பெரும்பான்மையானவை தோல்வியை தழுவி வரும் நிலையில், மகாராஜா திரைப்படம் அவருக்கு ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையல், மகாராஜா திரைப்படத்தின் இயக்குனர் ஆன நித்திலன் சாமிநாதன் தன்னை ஏமாற்றி படமெடுத்து விட்டதாக தயாரிப்பாளர் மருதமுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசி உள்ளார். தற்போது இந்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதன்படி அவர் கூறுகையில், 2020 ஆம் ஆண்டு இந்த கதை தன்னிடம் வந்தது. இந்த கதையை வைத்து நித்திலன் சுவாமிநாதனிடம் குறும்படம் ஒன்றை இயக்க கோரி பணம் கொடுத்தன். அவரும் குறும்படத்தை இயற்றினார். அதன்பின் இந்த கதையை படமாக்க பதிவு செய்திருந்தேன்.
அதற்காக கே.எஸ் ரவிக்குமார், சார்லி, அப்புகுட்டி உள்ளிட்டோரை வைத்து படமாக நினைத்தேன். ஆனால் என்னுடைய முதல் படமான அத்தியாயம் 1 படத்தை இயக்கும் பாணியில் இருந்ததால் இந்தப் படத்தை ஆரம்பிக்கவில்லை.
தற்போது இந்த படத்தை ஆரம்பிக்க வந்த போது மகாராஜா என்ற பெயரில் இந்த படம் ரிலீஸ் ஆகிவிட்டது என என்னுடைய நண்பர்கள் சொன்னதும் அதிர்ச்சியாகி விட்டேன். நித்திலன் என்னை ஏமாற்றி என்னுடைய கதையை வைத்து படம் செய்துவிட்டார். எனக்கு நீதி கிடைக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். இந்த சம்பவம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Listen News!